திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில், நடிகை குறித்து பத்திரிகையாளர் கேட்ட கேள்வி, அதிகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விமல் கிருஷ்ணன் இயக்கத்தில், சித்து, நேஹா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'டிஜே தில்லு'.
பிப்ரவரி 12 ஆம் தேதி, வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி, சமீபத்தில் நடைபெற்றிருந்தது.
அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் சித்து பதிலளித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில், எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
சர்ச்சை கேள்வி
செய்தியாளர் ஒருவர், சித்துவிடம், 'நிஜ வாழ்க்கையில், நடிகையின் உடலில், எவ்வளவு மச்சம் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தீர்களா? என்ற கேள்வியை முன் வைத்தார். இந்த கேள்விக்கு நடிகர் சித்து பதிலளிக்க மறுத்து விட்டார். டிஜே தில்லு படத்தின் டிரைலரில் இடம்பெறும் வசனத்தை குறிப்பிட்டு, பத்திரிகையாளர் இந்த கேள்வியை எழுப்பியிருந்தார்.
எழுந்த கண்டனங்கள்
நடிகையைக் குறிப்பிட்டு, திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில், பத்திரிகையாளர் கேட்ட கேள்வி, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்த வீடியோவை பகிர்ந்த நடிகை நேஹா ஷெட்டி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'டிரைலர் விழாவில் கேட்கப்பட்ட இந்த கேள்வி, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அவர் கேட்ட கேள்வி, தன்னுடைய பணியிடத்தில், வீட்டில், தன்னைச் சுற்றி இருக்கும் பெண்கள் மீது, அந்த பத்திரிகையாளர் வைத்திருக்கும் மரியாதை என்ன என்பதைத் தான் காட்டுகிறது' என சம்மந்தப்பட்ட நிருபரை விமர்சனம் செய்திருந்தார்.
This question was very unfortunate at the trailer launch today. But I must go on to add that it simply simplifies the respect he has for himself and for the women force around him at his work place and at home. https://t.co/XRDdIXaOZL
— Neha Sshetty (@iamnehashetty) February 2, 2022
சர்ச்சையில் சிக்கிய பத்திரிகையாளர்
அதே போல, நடிகர் சித்துவும் இது பற்றிய பதிவு ஒன்றை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். நடிகை நேஹா ஷெட்டி குறித்து பத்திரிகையாளரின் கேள்வி குறித்த வீடியோக்கள், அதிக அளவில் வைரலாகி, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நிருபராக இருந்தால், பொது இடம் ஒன்றில், இப்படி நடிகையை குறித்து என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற எண்ணத்தில் இப்படி கேட்டது தவறான போக்கு என, சம்மந்தப்பட்ட பத்திரிகையாளருக்கு, பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பத்திரிக்கையாளர் விளக்கம்
தொடர்ந்து, தன் மீது அதிக விமர்சனங்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது பற்றி பத்திரிகையாளர் சுரேஷ் என்பவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'ரொமான்டிக் திரைப்படம் என்பதால் தான் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டேன். அதில், எந்தவித தவறான அர்த்தமும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் கேள்வி கேட்கவில்லை. தயவு செய்து, என்னைத் தவறான வழியில் புரிந்து கொள்ள வேண்டாம். டிஜே படத்தின் ட்ரைலர் மிகச் சிறப்பாக உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
It's a Romantic film and I asked a romantic question. My intention is very clean and no double meaning in that. Please don’t take me in the wrong way!#DJTillu trailer is just outstanding. All the best to lovely pair @siddu_buoy & @iamnehashetty.@vamsi84 @venupro
— Suresh Kondeti (@santoshamsuresh) February 2, 2022
ரசிகர்கள் ஆதரவு
தன மீதான விமர்சனத்திற்கு, பத்திரிகையாளர் விளக்கமளித்த நிலையிலும், பொது வெளியில், நடிகையை அவமதிக்கும் வகையில், அருவருக்கத்தக்க கேள்வி கேட்டது நிச்சயம் தவறு தான் என பலரும் தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகைக்கு அந்த நேரத்தில் ஏற்பட்ட தர்ம சங்கடமான நிலையை மன்னிப்பு கேட்பதால், சரி செய்து விட முடியாது என்றும், தொடர்ந்து நடிகை நேஹா ஷெட்டிக்கு ஆதரவான கமெண்ட்டுகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.