BREAKING: ஜீவாவின் 'ஜிப்ஸி' படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற வித்தியாசமான மற்றும் உணர்வுப்பூர்வமான படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ராஜூ முருகன். இவர் தற்போது 'ஜிப்ஸி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார்.

ஜீவா மற்றும் ராஜூ முருகனின் ஜிப்ஸி படத்தை ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளது | Jiiva and Raju Murugan's Gypsy Satelite rights acquired by Zee

மேலும், இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிக்க, சன்னி வெய்ன், லால் ஜோஸ், சுஷீலாம் ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த  படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, செல்வகுமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கு சென்சாரில் A சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகிற மார்ச் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ஜி தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Entertainment sub editor

ஜீவா மற்றும் ராஜூ முருகனின் ஜிப்ஸி படத்தை ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளது | Jiiva and Raju Murugan's Gypsy Satelite rights acquired by Zee

People looking for online information on Gypsy, Jiiva, Raju murugan, Santhosh Narayanan will find this news story useful.