தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாகக்கூறி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்வலையை கிளப்பியுள்ளது. இந்த செயலுக்கு மக்களும் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்வத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “சட்டத்திற்கு உட்படாதவர்கள் யாருமில்லை. இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.