பிரபல அமெரிக்க பாடகி மற்றும் நடிகையான ஜெனிஃபர் லோபஸ், திருமணத்திற்கு பின்னர் பகிர்ந்த புகைப்படம் ஒன்று, அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | கொசுக்கடியில் சினிமா ஷூட்டிங்.. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து புதிய PAN INDIA படத்தின் BTS போட்டோ!
பிரபல பாடகியும் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸ், உலகம் முழுவதிலுமுள்ள இசை பிரியர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் ஆவார்.
அதே போல, ஜெனிஃபர் லோபஸின் பாடல்களுக்கென்று, ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். இதனால், அவரது Independent பாடல்கள் அனைத்தும் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஜெனிஃபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் ஆகியோருக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. முன்னதாக, சுமார் 20 ஆண்டுகளாக ஜெனிஃபரின் நண்பராக அஃப்லெக் இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது தனது 20 ஆண்டு கால நண்பரையே திருமணம் செய்துள்ளார் ஜெனிஃபர் லோபஸ்.
அதே போல, கடந்த 2002 ஆம் ஆண்டு, ஜெனிஃபர் மற்றும் பென்னுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், 2004 ஆம் ஆண்டு இருவரும் பிரேக் அப் செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், மீண்டும் கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜெனிஃபர் மற்றும் பென் இடையே காதல் உருவாக, கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்று, தற்போது திருமணமும் நடந்து முடிந்துள்ளது.
இது, ஜெனிஃபருக்கு நான்காவது திருமணம் என கூறப்படும் நிலையில், ஏராளமானோர் ஜெனிஃபர் - அஃப்லெக் தம்பதியருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அதே போல ஜெனிஃபர் லோபஸின் திருமண புகைப்படங்களும் தற்போது அதிகம் லைக்குகளை இணையத்தில் அள்ளி வருகிறது.
இந்நிலையில், தன்னுடைய திருமணத்திற்கு பின்னர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெனிஃபர் லோபஸ் பகிர்ந்துள்ள புகைப்படம், தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திருமணம் முடிந்த கையுடன், படுக்கையில் தனியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த ஜெனிஃபர் லோபஸ், பெட் சீட் மட்டும் போர்த்திக் கொண்ட படி உள்ளார். மேலும், அவரது கையில் மொபைல் போன் மற்றும் திருமண மோதிரமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | "நீங்க உங்க Ex கூட.." கரண் ஜோஹர் கேட்ட பரபரப்பு கேள்வி.. கொஞ்சம் கூட அசராம ஜான்வி சொன்ன பதில்