கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டது. ஆங்காங்கே வெளியில் வரும் மக்களுக்கு போலீஸ் கடுமையான தண்டனைகள் விதித்து வருகிறது.
இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலையுள்ளது. இதனையடுத்து தற்போது தொலைக்காட்சிகளில் சித்தி, மெட்டி ஒலி, சக்திமான், ராமாயணம், லொள்ளு சபா என 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான நிகழ்ச்சிகள் மறுஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்த மீம்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'கோமாளி' படத்தில் கோமாவில் இருந்து எழுந்திருக்கும் ஜெயம் ரவி, யோகி பாபுவிடம் என கேட்க அவர், 2019 என்பார். அப்போ செய்தி சேனலில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேச, யார ஏமாத்த பார்க்குற இது 1996 என்பார்.
இதனையடிப்படையாகக் கொண்டு இது 2020 ஆம் வருடம் என்று யோகி பாபு சொல்வது போலவும், அதற்கு யார ஏமாத்த பார்க்குற, டிவில 'மெட்டி ஒலி', 'சித்தி', 'சக்திமான்', 'லொள்ளு சபா' எல்லாம் வருது என சொல்வது போலவும் அந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மீம் வைரலாகி வருகிறது.
— Jayam Ravi (@actor_jayamravi) April 5, 2020