நடிகர் ஜெயம் ரவி தமிழில் மாஸ் மற்றும் ரொமான்ஸ் ஆகிய இருவிதமான ஜானர் திரைப்படங்களிலும் நடிக்க கூடியவர். அவ்வப்போது நகைச்சுவை திரைப்படங்களிலும் நடிக்கும் ஹீரோவாக திகழும் ஜெயம் ரவி தமது 29வது மற்றும் 30வது படங்களில் நடித்து வருகிறார்.
முன்னதாக அடங்க மறு, கோமாளி, பூமி உள்ளிட்ட படங்களில் சமீபத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழி வர்மன் என்கிற முக்கிய சோழ இளவரசன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி, ‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் அகிலன் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர். துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.
இப்படி ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பில் அடுத்ததாக உருவாகும் திரைப்படம்தான், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படம் ஜெயம் ரவியின் 30வது திரைப்படமாக இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி பல்வேறு இடங்களில் நடந்துவந்த நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள அப்டேட் தெரியவந்துள்ளது.