www.garudavega.com

ஜெயம் ரவிக்கு ஹீரோயினாக அவரது மனைவி ஆர்த்தி.. ROMANTIC படம் வாய்ப்பிருக்கா?.. மனம் திறந்த ஜெயம் ரவி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.

Jayam Ravi Answered about Romantic Movie with His wife Aarthi

Image Source : Arthi Ravi Instagram

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக அகிலன், இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அகிலன்

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் தயாராகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தினை இயக்கி உள்ளார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ளனர்.

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.

Jayam Ravi Answered about Romantic Movie with His wife Aarthi

Image Source : Arthi Ravi Instagram

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 28வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவு செய்துள்ளார், விஜய் முருகன் கலை இயக்குனராக பணிபுரிகிறார்.

சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மார்ச் 10, 2023 அன்று  வெளியாகிறது.

Jayam Ravi Answered about Romantic Movie with His wife Aarthi

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகர் ஜெயம் ரவி அளித்துள்ளார்.

அதில், தாஜ்மகாலில் உங்கள் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள், "இவங்க ரெண்டு பேரும் ஒரு படத்துல நடிக்கனும் ஹீரோ ஹீரோயினானு" போட்டு இருக்காங்க. இது நடக்குமா?. ஒரு காதல் கதையில் உங்கள் மனைவியோடு நடிக்க கேட்டால் உங்கள் ரியாக்ஷன் என்னவா இருக்கும்?" என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயம் ரவி, "அவங்களுக்கு நடிப்பதில் ஆர்வம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவங்களுக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. அவங்க நல்லா படிச்சவங்க. அவங்களுக்கு பிஸினஸ் மைன்ட். சினிமாவை பார்க்க ஆர்வமுண்டு. படங்கள் பத்தி சொல்ல ஆர்வம் உண்டு. நடிப்பில் அவங்களுக்கு ஆர்வம் இல்லை" என ஜெயம் ரவி பதில் அளித்துள்ளார்.

ஜெயம் ரவிக்கு ஹீரோயினாக அவரது மனைவி ஆர்த்தி.. ROMANTIC படம் வாய்ப்பிருக்கா?.. மனம் திறந்த ஜெயம் ரவி! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi Answered about Romantic Movie with His wife Aarthi

People looking for online information on Aarthi Rsvi, Jayam Ravi will find this news story useful.