தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்வை தழுவி உருவான ’தலைவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
விப்ரோ மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா அண்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை மதராசபட்டினம், தெய்வத்திருமகள் படங்களின் இயக்குநர் விஜய் இயக்கி உள்ளார்.
இதில் ஜெயலலிதாவாக முன்னணி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்கிறார்.
டிரைலரில் ஜெயலலிதா வெண்ணிற ஆடை படம் மூலம் திரைஉலகில் கால் பதித்த காட்சியும், 1991ல் முதல்வர் தேர்தலில் வெற்றிபெற்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்த படம் வரும் 2020 ஜூன் 26ல் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
The legend we know, but the story that is yet to be told!
Presenting #KanganaRanaut, in & as #Thalaivi. A film by #Vijay, arriving in cinemas on 26th June, 2020@KanganaTeam @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 @KarmaMediaEnt @TSeries @vibri_media pic.twitter.com/lTLtcq0bsd
— Team Kangana Ranaut (@KanganaTeam) November 23, 2019