www.garudavega.com

BIGG BOSS 6 TAMIL : “ஜனனிக்கு இந்த பிரச்சனை இருக்கு.. கவனிச்சீங்களா..?” - கமல் முன் போட்டு உடைத்த ஆயிஷா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

janany is conscious about camara, says ayesha bigg boss 6 tamil

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்குள் ஒருவாரம் கிளப் ஹவுஸ் டாஸ்க் நடந்தது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் குழுக்களாக பிரிந்து வீட்டு வேலைகளை பிரித்து செய்தனர். இவர்களுக்குள் 40வது நாள் நடக்கவேண்டிய சண்டை, சச்சரவுகள், புரிதல் பிரச்சனைகள், உரசல்கள், நட்பு என அனைத்துமே இந்த ஒருவாரத்திலேயே காண முடிந்தது. இந்த நிலையில் வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் போட்டியாளர்களிடையே பேசினார்.

அதன் ஒரு அங்கமாக, பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் இந்த நபர் போல் ஒருவர் இந்த வீட்டில் இல்லாமல் இருந்திருந்தால் நல்லாருக்கும் என்று நினைக்கக்கூடிய ஒரு ஹவுஸ் மேட்டை மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற டாஸ்க் வைக்கப்பட்டது.

இதில் ஜனனிக்கு நெகட்டிவாக ரெட் ஸ்டார் கொடுத்த ஆயிஷா, அது குறித்த காரணத்தை விளக்கினார். அதில், “யாராவது கவனிச்சீங்களா என்று தெரியவில்லை. ஜனனிக்கு ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது.. ஆம்... அவர் இந்த வீட்டில் கேமரா இருக்கிறது என்கிற விழிப்புடன் இருக்கிறார்.

அவர் அதிலிருந்து விடுபட்டு பரந்தும், இயல்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இதை நான் கொடுக்கிறேன்” என்று குறிப்பிட்டார். அதன் பின்பும் ஜனனியிடம் சென்று இது குறித்து விளக்கிய ஆயிஷா, “நான் சொன்னது உனக்கு புரிந்ததா? உன்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது.. அவற்றை நீ வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக நான் இதை நான் கொடுத்தேன்” என்று விளக்கினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Janany is conscious about camara, says ayesha bigg boss 6 tamil

People looking for online information on Ayesha, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Janany will find this news story useful.