தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 70 நாட்களை கடந்த நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.
அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது. முன்னதாக, பிக்பாஸ் இறுதி சுற்று வரை முன்னேறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஜனனி, கடந்த வார இறுதியில் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். ஜனனி பாதியில் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது.
இந்த நிலையில், தற்போது Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை ஜனனி அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்தும், தனது கேம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை ஜனனி பகிர்ந்து கொண்டார். நாமினேஷன் காரணமாக, உள்ளே இருப்பதே பயமாக இருந்தது என குறிப்பிட்ட ஜனனி, பேசினாலும் பயம், பேசாமல் இருந்தாலும் பயம், சண்டை போட்டாலும் பயம் என கூறி, எப்படி இருந்தாலும் வந்து சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
அதே போல ஷிவின் குறித்து பேசிய ஜனனி, "முதலில் ஷிவின் என்னிடம் நன்றாக பழகினாள். ஆனால் என்னையே டார்கெட் பண்ணுற மாதிரி அப்புறம் இருந்துச்சு. அது உண்மையா பொய்யான்னு தெரியல. எல்லா இடத்துலயும் என்னையே சொல்லுவா. முதல்ல சாதாரணமா விட்டுட்டேன். அதுக்கு அப்புறம் இவள் ஏன் அடிக்கடி என் பெயரை சொல்லிட்டு இருக்குறா அப்படின்னு இருந்துச்சு.
நாமினேட் பண்ணிட்டு வர்றப்போ என்கிட்ட சொல்லுவா, 'உன்ன தான் நாமினேட் பண்ணிட்டு வந்தேன். நீ போகவே இல்ல'ன்னு சொல்லுவா. ஒரு கட்டத்துக்கு மேல அத கேக்குறப்போ, அப்போ நீ கேம் ஆடலை, யார் யாரை தூக்கி வெளிய போடணும்ன்னு இருந்துச்சு. இப்போ நாம நல்லா கேம் ஆடுனா, மக்கள் பார்ப்பார்கள், யாரை வெளியில் தூக்கி போட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும் தானே. இவங்கள எப்படி டார்கெட் பண்ணி வெளியே அனுப்பணும்ன்னு ஷிவின் பண்றது மாதிரி தான் தோணுச்சு.
கேமில் அவள் Interest காட்டுவதை விட ஒருவரை வெளியே அனுப்பணும்ன்னு செயல்படுற மாதிரி இருந்துச்சு. ஷிவின் ஒருத்தர அனுப்பணும்ன்னு நெனச்சா, மத்த ஹவுஸ்மேட்ஸ் சொல்லாத காரணம் சொல்லியே மத்தவங்கள கூட அனுப்புற மாதிரி எனக்கு தெரிஞ்சுது" என ஜனனி கூறி உள்ளார்.