சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரபல கலை இயக்குனர் & நடிகர் சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் - நடிகர் & கலை இயக்குனர் கிரண் சந்திப்பு நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண் பதிவிட்டுள்ளார். "மிகச் சிறந்த தருணம். பல வருட கனவு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீங்கள் மிகவும் இனிமையானவர். ஜெயிலருக்காக மீண்டும் நன்றி டார்லிங் நெல்சன் திலீப்குமார் & சன் பிக்சர்ஸ்" என கிரண் பதிவிட்டுள்ளார்.
One of the BEST moment, pala varuda KANAVU🤩.. so sweet you sir @rajinikanth ,last 2days m hearing ur voice “so sweet”🤩😎😍🙏 #jailer thanks again my dear darling @Nelsondilpkumar 😍😘 @sunpictures #thalaivar #thalaivar169 pic.twitter.com/982M6fXoyq
— drk.kiran (@KiranDrk) October 20, 2022