www.garudavega.com

"மூஞ்சிக்கு நேரா கால ஆட்டுறீங்க?".. கோபப்பட்ட இசைவாணி.. மன்னிப்பு கேட்ட அண்ணாச்சி! #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இமான் அண்ணாச்சி மற்றும் இசைவாணி இருவருக்கும் இடையிலான உறவுச் சிக்கல் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Isaivaani angry for imman annachi activity biggbosstamil5

இமான் அண்ணாச்சியை இசைவாணிக்கு பிடிக்காது, இசைக்கு இமான் அண்ணாச்சியை பிடிக்காது என்பது உலகறிந்த விஷயம் என்று முன்பு ராஜூ சொன்னதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இசைவாணி அதை நீங்க சொல்லாதீங்க என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதன் பிறகு இடங்களில் அண்ணாச்சி பேசுவதை, இசைவாணி தனக்கு பிடிக்கவில்லை என்று நேரடியாக பதிவு செய்தாலும் அண்ணாச்சி ஒரு சில இடங்களில் தான் பேசியதற்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டு வந்தார். எனினும் ஒருவருக்கொருவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசிக் கொண்டு வந்தனர். இந்த நிலையில் இசைவாணியின் முகத்துக்கு நேரே காலை ஆட்டியதற்காக இமான் அண்ணாச்சியிடம் இசைவாணி கோபித்துக்கொண்டர்.

அதன் காரணத்தை கேட்டறிந்த இமான் அண்ணாச்சி, உண்மையில் அது தான் காரணம் என்றால் மன்னித்து விடு என்று கேட்க, ஆனால் இசைவாணியோ, செய்வதையும் செய்து விட்டு மன்னிப்பு கேட்டால் எப்படி என்பது போல் சமாதானம் ஆகாமல் இருந்தார். அவரிடம் சமாதானம் பேசிய ஐக்கியிடம் இசைவாணி, “உன் முகத்துக்கு நேரே அவர் ஒரு காலை ஆட்டி விட்டு பின்னர் மன்னிப்பு கேட்டால் எப்படி மன்னிப்பாய்?” என்று கேட்டதற்கு, ஐக்கி, “நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்” என்று சொல்ல, அதற்கு மீண்டும் இசைவாணி, “அது நீங்கள். நான் அப்படி இல்லை. எனக்கு பிடிக்காது” என்று காட்டமாக கூறிவிட்டார். எனினும் அண்ணாச்சி தொடர்ந்து மன்னிப்பு கேட்டதால், “மன்னிப்பு எல்லாம் வேண்டாம் அண்ணாச்சி.. விடுங்க!” என்று கூறிவிட்டார்

முன்னதாக ஒரு நாமினேஷனில் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஃபோட்டோக்களை நெருப்பில் போட்டு பொசுக்கி நாமினேஷன் செய்ய வேண்டுமென்கிற டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. அதில் இசை வாணியின் புகைப்படத்தை இமான் அண்ணாச்சியும், இமான் அண்ணாச்சியின் புகைப்படத்தை இசைவாணியும் நெருப்பில் பொசுக்கி, அதற்கான விளக்கங்களை கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Isaivaani angry for imman annachi activity biggbosstamil5

People looking for online information on BiggBossTamil5, Imman Annachi, IsaiVaani, Iykki berri will find this news story useful.