விஜிபியின் புகழ்பெற்ற சிலை மேன் என்று அழைக்கப்படும் தாஸ் என்கிற முதியவர், COVID-19 காரணமாக காலமானார் என்று சிலர் செய்தி வெளியிட்டனர். இதனை உண்மை என்று நம்பிய பொது மக்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். ஆனால், இது போலி ச்செய்தி என்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
வி.ஜி.பி யுனிவர்சல் கிங்டம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வதந்தியை பற்றி இவ்வாறு எழுதியுள்ளனர், "சில போலி செய்திகள் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அவர்கள் சிலை மேன் COVID-19 காரணமாக காலமானார் என்று பரப்பி வருகின்றனர். இந்த வீடியோவில், அவர் உயிருடன் இருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் மீண்டும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை திறக்கும்போது உங்கள் அனைவரையும் சந்திக்க தயாராக இருக்கிறார். இந்த வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என தயவு செய்து கேட்டு கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.