www.garudavega.com

ஜெயம் ரவி - ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் படத்துக்கு டைட்டில் இதுவா..? தெறி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 06, பிப்ரவரி 2022:- ‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன், ஜெயம் ரவி நடிப்பிலான தமது அடுத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 28வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

is this Jayam Ravi Priya Bhavani Shankar new movie title deets

Jayam Ravi 28வது படம்

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் சென்னையில் தொடங்கி, பின்னர் தூத்துக்குடி வரை நடந்துகொண்டிருந்தது. ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த இப்படத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வத்திக்குச்சி, காலா, ரைட்டர் படங்களில் நடித்த திலீபன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Also Read: "இதுவரை 5 சீசன் Bigg Boss-லயும் ஒரே ஒரு பொண்ணு தான் ஜெயிச்சாங்க... ஆனா அவங்களும் Bold இல்ல" .. வனிதா பேச்சு

ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி அண்மையில் கோமா உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து பூமி திரைப்படத்தில் நடித்திருந்தார். டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியான இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளவரசராக நடிக்கிறார்.

ப்ரியா பவானி சங்கர்

இதேபோல் நடிகை ப்ரியா பவானி சங்கர், முன்னதாக ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து நடித்த ஓ மணப்பெண்ணே திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் படத்தில் முன்னணி நடிகையாக ஒப்பந்தம் ஆகிவரும் ப்ரியா பவானி சங்கர், ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

படத்துக்கு டைட்டில் இதுவா?

இந்நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த திரைப்படத்துக்கு அகிலன் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம என எதிர்பார்க்கப்படுகிறது.  

ரொமாண்டிக் நாயகன்

என்னதான் ஆக்‌ஷனில் பட்டையை கிளப்பினாலும், ,ரொமாண்டிக் நாயகனாகவும் ஜெயம் ரவி படங்களுக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. எனவே ஜெயம் ரவி மற்றும் ப்ரியா பவானி சங்கர் இருவரும் இணையும் இந்த திரைப்படத்தை காணவும் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

Also Read: "40 வயசு.. புருஷன் இல்ல.. 2 முறை Divorce ஆயிடுச்சு".. Bigg Boss வீட்டில் வனிதா உருக்கம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Is this Jayam Ravi Priya Bhavani Shankar new movie title deets

People looking for online information on Jayam Ravi, Jayam Ravi 28, JR28, Priya Bhavani Shankar, Screen Scene Media Entertainment will find this news story useful.