www.garudavega.com

ஆமா.. கமல் சார் 24 மணி நேரமும் OTT-ல BIGGBOSSULTIMATE பாக்குறாரா? அவரே போட்டு உடைத்த உண்மை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

CHENNAI, BiggBoss Ultimate, 2022, Jan 31:- விஜய் டிவியில் ஒளிபரப்பாப பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த 5 சீசன்களையும் தொகுத்து  வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தற்போது ஓடிடியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியினையும் புதுமையான முறையில் தொகுத்து வழங்கி வருகிறார்.

is Kamalhaasan watching bigg boss ultimate in OTT here is answer

Anchor கமல்ஹாசன்

இந்த நிகழ்ச்சியில், நடுவராகவும் ஆங்கராகவும் என பல ரோல்களை வகிக்கும் நடிகர் கமல்ஹாசன், போட்டியாளர்களின் நிறை குறைகளை சுட்டிக்காட்டி, அவர்கள் செய்தவை, செய்திருக்க வேண்டியவை, செய்திருக்க கூடாதவை, பேசியவை, பேசியிருக்க வேண்டியவை, பேசியிருக்க வேண்டாதவை என பல விதமாக அலசுவார். அதையெல்லாம் பார்க்கும்போது கட்டாயம் கமல் சார் பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சமேனும் நுணுக்கத்துடன் பார்த்தால் தான் இவ்வளவு பேச முடியும் என்று அனைவருக்குமே கண்டிப்பாக தோன்றும்.

Also Read: மாளும்மா.. மொத்த மாலத்தீவும் விழுந்துருச்சு!.. படு கிளாமர் பிகினி ஃபோட்டோ! இதுவரை வந்ததுலயே இது வேற மாரி..

டிஸ்னி +ஹாட்ஸ்டார் ஓடிடியில்

ஆனாலும் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் பார்த்துக்கொண்டிருப்பாரா? ஹைலைட்ஸை மட்டும் நோட் பண்ணிக்கொண்டு பேசுகிறாரா? என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வந்தது. அதற்கு தற்போது அவரிடம் இருந்தே பதில் கிடைத்துள்ளது. அதன்படி, 24 மணி நேரமும் டிஸ்னி +ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி , ஜனவரி 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.

is Kamalhaasan watching bigg boss ultimate in OTT here is answer

கலந்துகொண்ட போட்டியாளர்கள்

அத்துடன் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு ஒரு மணி நேர எபிசோட் அதே நேரத்தில் விஜய் டிவியிலும் அதே நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த போட்டியில் இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பான 5 சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட பிரபல போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ஆம், தற்போதைய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் உள்ளிட்டோர் ஹவுஸ்மேட்ஸாக கலந்து கொண்டுள்ளனர்.

ஏன் 24 மணி நேரமும் ஓடுது?

is Kamalhaasan watching bigg boss ultimate in OTT here is answer

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஓடுவது எதற்காக என்கிற சந்தேகத்துக்கு கமல்ஹாசனே, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமாகவே முன்வந்து விளக்கினார். அதில், “கட் பண்ணி தானே போடுறாங்க.. மற்ற நேரங்கள் எல்லாம் என்ன நடந்தது என காட்டினால் தானே உண்மை என்ன என தெரியும் என்று பார்வையாளர்கள் நிறைய பேர் கேட்டீர்கள். உங்கள் ஐடியாவை தான் இப்போது செயல்படுத்தி உள்ளார்கள்!” என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். 

கமல் சார் 24 மணி நேரமும் OTT-ல BiggBossUltimate பாக்குறாரா?

is Kamalhaasan watching bigg boss ultimate in OTT here is answer

இந்நிலையில் முதல் நாள் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை தொடங்கி, தொகுத்து வழங்கிவிட்டு பின்னர் இதுபற்றி பேசிய கமல்ஹாசன், “பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடுவதால் உங்களுக்கு தான் வேலை அதிகம். நானும் பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருப்பேன். அதே சமயம் உங்களையும் கவனித்துக் கொண்டிருப்பேன். நீங்கள் பார்ப்பது சரியா என நான் பார்த்துக் கொண்டிருப்பேன்” என்று ரசிகர்களை நோக்கி கூறினார்.

Also Read: "எப்ப தாத்தா ஆவீங்க?".. BiggBossUltimate-ல்  ஸ்ருதிஹாசன் திருமணம் பற்றி சூசகமாக பேசிய கமல்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Is Kamalhaasan watching bigg boss ultimate in OTT here is answer

People looking for online information on BiggBossOTT, BiggBossUltimate, KAMALHAASAN will find this news story useful.