பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. தற்போது ஹர்பஜன் சிங் உடன் 'ப்ரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சதீஷ் போன்ற பலரும் நடிக்கின்றனர். இந்நிலையில் அடுத்ததாக ஆரியுடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் நடிகை லாஸ்லியாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. மேலும் அவரது தந்தையின் நண்பர் மகனான கனடாவை சேர்ந்த ஒருவருடன் அவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி லாஸ்ஸியா தரப்பில் விசாரித்தபோது "இது முற்றிலும் வதந்தி என்றும், இதை நம்ப வேண்டாம்" என்றும் அவர் மறுத்துள்ளார்.