பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினம் சண்டை சச்சரவுகளுடன் தொடங்கிய நிகழ்ச்சி, இறுதியாக எமோஷனலாக முடிந்தது. அதேபோல பாலாஜி, ஷிவானி இடையே ஒரு இனம் புரியாத நேசம் படர்வதை காணமுடிகிறது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில், ஷிவானி பாலாஜிக்கு குடை பிடித்து அவருடன் நடப்பதையும். இருவரும் இணைந்து தனுஷின் "ஊதுங்கடா சங்கு" பாடலை பாடுவதையும் காணமுடிகிறது. இப்படியே போனால் இந்த சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகுமா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.