நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் மிகவும் பரபரப்பான நடிகைகளில் ஒருவர்.
அட்லீ-ஷாருக்கானின் (Atlee-Shah Rukh Khan) பெயரிடப்படாத படத்தின் மூலம் பாலிவுட்டில் களமிறங்க உள்ளார். இவர் சமீபத்தில் 'கோல்ட்' (Gold) மலையாள படப்பிடிப்பில் இணைந்தார், இந்த படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் 'பிரேமம்' படத்திற்குப் பிறகு இயக்குகிறார். நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா (Nayanthara) உண்மையில் சமூக ஊடகங்களில் இருக்கிறாரா அல்லது போலி கணக்கா என்பது இதுவரை தெரியாமலே இருந்தது. அவரது பெயரில் ட்விட்டரில் உள்ள ஒரு குறிப்பிட்ட கணக்கு விளக்கத்தில் 'ரசிகர் ட்விட்டர்' என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது, இதில் முக்கிய பிரபலங்கள் உட்பட 2.7 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்பவர்களாக உள்ளனர். சுவாரஸ்யமாக, பின்தொடர்பவர்களில் ஒருவர் அவருடைய வருங்கால கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். நயந்தாரா பெயரில் இன்ஸ்டாகிராமில் உள்ள மற்றொரு கணக்கிலும் முன்னணி நடிகர்கள் அடங்கிய லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இருப்பினும், நயன்தாரா, சமீபத்தில் விஜய் டிவியில், தொகுப்பாளினி டிடி திவ்யதர்ஷினியுடன் ஒரு நிகழ்ச்சியில், நயன்தாரா எந்த சமூக ஊடக தளத்திலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அத்தகைய சமூக வலைதளங்களில் தன் வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொள்ள முடியாது என்று அவர் கூறினார். எனவே நடிகை நயன்தாரா சமூகவலைதளங்களில் (Social Media) இல்லை என்பது தெளிவாகிறது.
சமூக வலைதளங்களில் இல்லாத பிரபலம் நயன்தாரா மட்டுமே அல்ல. நடிகர் தல அஜித், இசையமைப்பாளர் இளையராஜா, பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர், சைஃப் அலிகான் ஆகியோரும் சமூகவலைதளத்தில் இல்லை.