2018 ஆண்டு காமெடி கலந்த பேய் படமாக வெளியான திரைப்படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இப்படத்தை படத்தை 'ஹர ஹர மஹா தேவகி', 'கஜினிகாந்த்' படத்தை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கி இருந்தார்.
கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இன்று ஈசிஆரில் தொடங்குவதாகவும் கூறப்படுகிறது.
இதில் முதல் பாகத்தை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயகுமாரே நாயகனாக நடிக்கிறார் என தகவல் பரவி வருகிறது. முன்னதாக அவர் கவுதம் கார்த்திக்கை வைத்து இயக்கும் ‘தீமை தான் வெல்லும்’ படப் பணியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இவர் ’இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.