www.garudavega.com

ஜாக்கி சான், அர்னால்ட் இணைந்து நடித்த "அயர்ன் மாஸ்க்" திரைப்படம் தமிழில் இம்மாதம் வெளியீடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இருவரும் ஹாலிவுட் சினிமாவின் மிக முக்கியமான இரு துருவங்கள். இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பரபரப்பும் சுறுசுறுப்பும் கலந்த காமெடி ஸ்டண்ட் காட்சிகளுக்கு ஜாக்கிசான் ஒரு பக்கம் பிரபலம் என்றால், இன்னொரு பக்கம் உடல் வலிமையுடன் தோற்றத்திலும் தேர்ந்து எடுக்கும் படங்களில் வித்தியாசமான சண்டை காட்சிகள் மூலம் அர்னால்ட் மிக பிரபலம்.

Iron mask will hit the theatres soon in Tamil

இந்நிலையில், ஜாக்கி சான், அர்னால்ட் இருவரும் இணைந்து நடித்த "அயர்ன் மாஸ்க்" ஆங்கில படம் தமிழில் இம்மாதம் வெளியாகிறது. கடந்த ஆண்டு வெளிநாடுகளில் வெளியான இந்த படம், தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜீத் இணைந்து நடித்தால் எப்படி பரபரப்பாக இருக்குமோ, அப்படி பரபரப்பாக இருக்கும் ஜாக்கி சான் - அர்னால்ட் நடித்த "அயர்ன் மாஸ்க்" படம். இருவரும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்கள் என்பது தான் முக்கியமான ஒன்று.

 Iron mask will hit the theatres soon in Tamil

சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த இப்படம் தமிழ் மக்களின் பார்வைக்கு வரவுள்ளது. வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், மகிழ்ந்து சிரிக்க காமெடி காட்சிகளும் அரங்கத்தை அதிர வைக்கப் போகிறது. 49.1 பில்லியன் பட்ஜெட்டில் உருவான பிரமாண்டமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 Iron mask will hit the theatres soon in Tamil

டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சீனா செல்கிறார். ஜாக்கி சானை அர்னால்ட் முதலில் துரத்துகிறார். பிறகு இருவரும் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் படுபயங்கரமாக மோதுகிறார்கள்.

 Iron mask will hit the theatres soon in Tamil

இறுதியில் டிராகனை அழித்தார்களா, மகாராணியை காப்பாற்றினார்களா என்பதே இப்படத்தின் முழு கதை. ஜுராசிக் பார்க், கிங்காங் போன்ற படங்களை தமிழில் வெளியிடப்பட்ட பிரபல நிறுவனமான ஹன்சா பிக்சர்ஸ் "அயர்ன் மாஸ்க்" படத்தை தமிழில் வெளியிடுகிறது.

மற்ற செய்திகள்

Iron mask will hit the theatres soon in Tamil

People looking for online information on அயர்ன் மாஸ்க், அர்னால்ட், ஜாக்கி சான், Iron maskJockieChan will find this news story useful.