பவி டீச்சர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட பிரிக்டா, முன்னதாக முகின் நடித்த வேலன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் பணிபுரிந்ததுடன், முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.
Also Read | BREAKING: சிம்பு நடித்த 'மாநாடு' படத்தின் தெலுங்கு ரீமேக்.. இயக்குனர் இவரா? போடு வெடிய
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இந்த படத்தை இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த இளம் நடிகை பிரிக்டா பேசிய கருத்து சர்ச்சைக்குரியதாக மாறியதுடன், சமூகவலைதளங்களில் வெகுவேகமாக பரவி வந்த நிலையில், தற்போது இதுகுறித்து அவரே மனம் திறந்துள்ளார்.
அதில் பேசிய பிரிக்டா, “அப்படி ஒரு கருத்து என் மனதில் இல்லை. என் மனசார சொல்கிறேன். எனக்கும் அப்படி நிறைய உடன் படித்த கல்லூரி நண்பர்கள் இருக்கிறார்கள். நான் சொல்ல வந்த கருத்து வேற. நான் தப்பா மாத்தி சொல்லிட்டேன். அதற்கு என் மனமார்ந்த மன்னிப்புகளை கேட்டுக்கொள்கிறேன்.
முதலில் இந்த மாதிரி கருத்துகளை நான் பேசலாமா.? அதற்கு நான் தகுதியா? என்கிற விஷயம் உள்ளது. நான் பலரை புண்படுத்தியிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது. நண்பர் ஒருவர் சோசியல் மீடியா முன்பு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடுப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் அவர் கேட்டதற்காக அல்ல, நிஜமாகவே இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்ததால் நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன். இதனால் அந்த நண்பர் வழக்கு தொடரவில்லை என்று தெரிவித்துவிட்டார். இது நானே ஜெயித்த மாதிரி.. ஏனென்றால் எனது ஃபேஸ்புக் ஃபேக் ஐடிக்கு எதிராக நின்று எனக்கு துணை நின்றவர். அப்படியான பலரும் நான் இப்படி பேசியதால் புண்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் இருந்து மன்னிப்பு வேண்டும்.
இது எனக்கு ஒரு பாடம். கண்டிப்பா இதன் பிறகு நான் சமூகத்தை பாதிக்காத வகையில் பொறுப்புடன் பேசுவேன். மன்னித்துவிடுங்கள்.!” என்று தெரிவித்துள்ளார்.
Also Read | Coffee with kaadhal: யுவனின் இசையில் வைரலாகும் பேபி கேர்ள் வீடியோ ஆல்பம்