தமிழில் துணிச்சலான கதாபாத்திரங்கள் பலவற்றை ஏற்று நடிப்பவர் இளம் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.
சரத்குமாரின் மகளான இவர் தமிழில் “போடா போடி” திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து நடித்து அறிமுகமாகி இருந்தார்.
பின்னர் சர்க்கார், சண்டகோழி-2 மற்றும் பல தமிழ் படங்கள், அவற்றைத் தொடர்ந்து தெலுங்கு படங்கள் என முன்னணி திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது மகனை அறிமுகப் படுத்துவதாக கூறி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவின் கேப்ஷன் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் என்ன சொல்கிறார் என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஆம் அப்படி தன் மகன் என்று கூறி வரலஷ்மி சரத்குமார் யாரை அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்றால் தன் செல்ல நாய்க்குட்டியை தான்.
இது பற்றி ஒரு வீடியோ பதிவில் தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார், “என்னுடைய மகனை அறிமுகப் படுத்துகிறேன்!” என்று கூறி தன்னுடைய செல்ல நாய்க்குட்டியின் பெயர் “#guccivaralaxmi” என்று பதிவிட்டுள்ளார்.