பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' எனும் பிரம்மாண்ட திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் உருவாகி வருகிறது.
இந்திய அளவிலான இந்த பிரம்மாண்ட படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
பெரும் பொருட்செலவில் டிவிவி நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பிரபல பென் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதுமே இந்த படத்தின் மாபெரும் வணிகமானது உறுதியாகியுள்ளது.
ஆம், அண்மைக் காலமாகவே பென் மூவிஸ் நிறுவனத்திடமிருந்து ஒவ்வொரு மொழி வாரி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையையும் தனித்தனியாகக் கைப்பற்ற, கடும் போட்டி நிலவி வந்ததாக தெரிகிறது. தற்போது இதன் பிரம்மாண்ட முடிவுகள் உறுதியாகி ரசிகர்களிடையே இந்த படம் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என சொல்லலாம். இந்நிலையில் தான் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் யார் யாருக்கு என்பதைப் படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
அதன்படி ஆர்.ஆர்.ஆர். படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழியின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைகளை ஜீ 5 நிறுவனமும் இந்தி மொழியின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. தவிர, ஆங்கிலம், கொரியன், ஸ்பானீஷ், டர்க்கீஷ், போர்ச்சுகீஷ் உள்ளிட்ட மொழிகளின் டிஜிட்டல் உரிமைகளையும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமே கைப்பற்றி இருக்கிறது. மேலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்களில் இந்தி மொழிக்கான உரிமத்தை ஜீ சினிமா கைப்பற்றியுள்ளது. இதேபோல் தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் குரூப் நிறுவனமும், படத்தின் மலையாள மொழியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஏசியா நெட் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.
We are delighted to announce the official DIGITAL & SATELLITE partners for India’s Biggest Film #RRRMovie.
Thanks to @ssrajamouli ji & @DVVMovies for choosing us to present @RRRMovie.
@jayantilalgada @PenMovies@NetflixIndia @ZEE5India @zeecinema@starmaa @vijaytelevision pic.twitter.com/5FQ6G45qPI
— PEN INDIA LTD. (@PenMovies) May 26, 2021
சுருக்கமாக ஆர்.ஆர்.ஆர். படத்தின் தமிழ் வெர்ஷனின் ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை ஜூ-5 ஓடிடி தளமும், ஆர்.ஆர்.ஆர் படத்தின் தமிழ் வெர்ஷனின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியும் கைப்பற்றியுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் தயாரான சினிமாக்களில் எந்தவொரு படமும் இதுவரையிலும் இந்த அளவு விலைக்கு விற்பனையானதில்லை என்று திரையுலக வட்டாரத்தினர் கருத்து தெரிவிப்பதுடன் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ALSO READ: வாத்தி கம்மிங்.. பிரபல சேனலில் Behindwoods Gold Icons விருது விழா! தெறிக்கவிடும் ப்ரோமோ!