உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய படங்களின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 7 கேரக்டர்களில் சியான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார். சயின்ஸ் பிக்ஷன் முறையில் உருவாகும் இந்தப் படம் மே மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான Seven Screen Studio நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ர படத்தின் படப்பிடிப்பு 90 நாட்கள் முடிவடைந்த உள்ளதாகவும், மீதி 25 சதவீதம் படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கோப்ரா படம் பற்றிய வேற லெவல் விஷயம் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விக்ரம் டபுள் ரோலில் நடிக்கிறாராம். இந்த செய்தி அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.