www.garudavega.com

“குடும்பம்னா குறை இருக்கும்!”.. ‘வாரிசு’ டிரெய்லரில் உறவுகளின் மேன்மையை பேசும் விஜய்! VARISU

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Importance of family Vijay Varisu Tailer dialogue

Also Read | "பெயிடு ஹாஸ்டல்லயா இருக்கீங்க".. ‘நேருக்கு நேர்’.. அசிம் Vs ரச்சிதா... அனல் பறந்த வாதம்..! Bigg Boss 6 Tamil

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.  தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Importance of family Vijay Varisu Tailer dialogue

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Importance of family Vijay Varisu Tailer dialogue

இந்நிலையில் வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லர்படி, பெரிய பாரம்பரிய குடும்ப தலைவரான சரத்குமாருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். கடைசி மகன் விஜய். தன் குடும்பத்துக்காக களம் இறங்கும் விஜய் சில எதிரிகளை எதிர்கொள்கிறார். அவர்களுள் முக்கிய முதன்மை வில்லனாக பிரகாஷ்ராஜ் வருகிறார்.  இதனிடையே சகோதரர்கள், பெற்றோர், ரஷ்மிகாவுடன் காதல், காமெடி நண்பன் யோகி பாபு என ஜனரஞ்சக களத்தில் கலர்ஃபுல்லாக வலம் வரும் விஜய் டிரெய்லரின் இறுதியில், "குடும்பம்னா குறை இருக்கும்தான்.. ஆனா நமக்குனு இருக்குறது ஒரே ஒரு குடும்பம்தான்" என‌ வசனம் பேசுகிறார்.

Importance of family Vijay Varisu Tailer dialogue

ஏற்கனவே பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகை நந்தினி ராய் அளித்திருந்த பிரத்யேக பேட்டியில், "கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்கள் விஜய் நடிப்பில் எமோஷனல் ஆகி விடுவார்கள்." என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Varisu : “ஒட்ட வைக்க முடியாதா?!”.. ‘பூவே உனக்காக’ வசனத்துக்கு வாரிசு ட்ரெய்லரில் விஜய் கவுண்ட்டர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Importance of family Vijay Varisu Tailer dialogue

People looking for online information on Poove Unakkaga, Varisu Trailer, Vijay, Vijay speech will find this news story useful.