விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது.
பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். அதன் பின்னர் அபிஷேக் ரீ எண்ட்ரி கொடுக்க, அவரை அடுத்து அமீர், சஞ்சீவ் வைல்டு கார்டில் எண்ட்ரி கொடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து ஐக்கி வெளியேறினார்.
தற்போது சிபி, ராஜு, இமான், வருண், நிரூப், அபினய், அக்ஷ்ரா, பாவ்னி, தாமரை, பிரியங்கா ஆகியோர் இருக்கின்றனர். இப்படி 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் நடப்பு வார தலைவருக்கான போட்டி அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பெட்டிகளை செங்குத்தாக அடுக்கி வைக்கும் "கோபுரங்கள் சாய்வதில்லை" என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதை செய்யும் போது மற்ற போட்டியாளர்கள், ஒரு குறிப்பிட்ட பஸ்ஸர் சவுண்ட், பிக்பாஸ் வீட்டில் ஒலிக்கும். அந்த நேர இடைவெளிக்குள் மற்றவரை தாக்குவதும் தாக்குதலில் இருந்து தற்காத்து தடுத்துக் கொள்ளவும் செய்யலாம்.
சிபி, ராஜு மற்றும் இமான் ஆகிய மூவருக்கான இந்த டாஸ்கில் இமான் அண்ணாச்சி இறுதியில் வெற்றி பெற்றார். எனினும் பிக்பாஸின் கேள்விக்கிணங்க நிரூப் தன் காயினை பயன்படுத்தி கேப்டன் ஆனார். இதனால், “நீ பயந்துட்ட டா நிரூப்!” என அண்ணாச்சி நிரூப்பை பார்த்து கூறுகிறார். முன்னதாக டாஸ்கிற்கு முன்னரே நிரூப்பிடம் பேசிய அண்ணாச்சி, “நான் வெற்றி பெறுவதில் உனக்கு உடன்பாடில்லையா?” என கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்திருந்த நிரூப், “அப்படி எல்லாம் இல்லை. எனக்கு யார் கேப்டன் ஆனாலும் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த காயினை நான் இப்போது பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு மதிப்பில்லாமல் போய்விடும். எனவே நான் காயினை இம்முறை பயன்படுத்துவேன்.” என கூறினார். அதற்கு இமான் அண்ணாச்சி, “அப்ப எதுக்கு நாம ஆடிக்கிட்டு? யார் ஜெயிச்சாலும் அவன் காயினை பயன்படுத்திவிடுவான். நாம ஜெயிச்சாலும் வேஸ்ட்!” என்று கூறியிருந்தார்.
அதன்படி தற்போது இமான் ஜெயித்தும் நிரூப் காயினை பயன்படுத்தி கேப்டன் ஆனதால் நிரூப் சொல்லும் எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய முடியாது, ஏதோ ஒரு வேலை கொடுத்தால் செய்யலாம் என இமான் காட்டமாக கூறுகிறார். நிரூப்போ, பாத்ரூம், பெட்ரூம் என எந்த ஏரியாவுக்குள் செல்லும்போது அந்த ஏரியாவில் தான் நியமிக்கும் ஆளுமைகளிடம் அனுமதி கேட்டுத்தான் செல்ல வேண்டும்! என்கிறார். ஆனால் இமான் மறுக்கிறார். தண்டனை வேண்டுமானால் கொடுக்கச் சொல்கிறார்.
குறிப்பாக நிரூப் அந்த ஏரியாக்களுக்கு பிரியங்கா மற்றும் அபிஷேக்கை நியமிக்க, அதற்கு இமான் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அதற்கு காரணமும் சொல்கிறார். அதன்படி, பிரியங்கா மற்றும் அபிஷேக் இருவரும் தங்களுக்கு வழங்கப்படும் இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தான் சந்தேகப்படுவதாகவும் நிரூப்பிடமும் பிரியங்காவிடமும் கூறி வாக்குவாதம் செய்கிறார். அப்போது பிரியங்கா, இமானிடம், “நான் இதுவரை என் அதிகாரத்தை தவறாக ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. அதே சமயம் நீங்கள் எத்தனை செய்ய வேண்டிய வேலையை தவிர்த்துவிட்டு, ஓபி அடித்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும்!” என கூறுகிறார்.
அதற்கு, இமான் அண்ணாச்சி, “ஏதோ ஒன்று சொல்லு பார்ப்போம்!” என எகிற, பிரியங்கா, “நான் மிஸ் யூஸ் பண்றேனு சொன்னீங்கள்ல? நீங்க எந்த இடத்துல நான் அதை செய்தேன்னு சொல்லுங்க.. நான் சொல்றேன்!” என கூற, உடனே ராஜூ, “எனக்கு தெரியும். அவர் ஓபி அடிக்கல. பாத்திரம் கழுவியிருக்கார். துணி துவைத்துள்ளார். ” என கூறுகிறார். மீண்டும் பிரியங்கா, “நான் தான் எனக்கு கொடுத்த அதிகாரத்தை வேண்டாம் என நிரூப்பிடம் சொல்லிவிட்டேனே! நீங்க நான் மிஸ் யூஸ் பண்ணிட்டேன்னு எப்படி சொல்லுவீங்க? வார்த்தைகளை பார்த்து பேசுங்க” என கூறினார்.
கடைசியாக இந்த பிரச்சனைகளை சுமூகமாக முடிக்கும் விதமாக நிரூப், இவற்றை பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம். இப்போதைக்கு இந்த முடிவுகளை எடுக்கவில்லை. சபையை கலைப்போம் என கூறிவிட்டார்.