எப்போதும் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் பேசிக்கொள்ளும் பேச்சுகள்தான் பெரும்பாலும் உரசலுக்கு காரணமாகின்றன.
ஜாலியாக பேசத் தொடங்கி, சீரியஸாக சென்று பேச்சுகள் முடிவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அவர்கள் பேசுவது பார்வையாளர்களுக்கு ஒரு பதட்டமாக இருப்பது என்பது தவிர்க்க முடியாதது ஆகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் குழுவாக அமர்ந்து பிரியங்கா, அபிஷேக், நிரூப், வருண் என அனைவரும் காபி குடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அதில் விருதுகள் குறித்து அண்ணாச்சியும் பிரியங்காவும் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது இடைமறித்த அபிஷேக், ஏதோ சொல்ல வர, அதை அண்ணாச்சி கவனிக்கவில்லை. உடனே அபிஷேக் அண்ணாச்சியை பார்த்து சத்தமாக, “யோவ் ஒரு நிமிஷம் கேளுயா” என்று கத்த, உடனே டென்ஷனான அண்ணாச்சி, “தம்பி மரியாதை.. நீ என்ன கொடுக்கிறாயோ.. அதுதான் திருப்பி வரும்.. என்னதான் சொல்ல வர அதை சொல்லு” என்று கேட்கிறார்.
இதனையடுத்து பிரியங்கா, “அண்ணாச்சி.. நீங்க தானே அவன் கிட்ட நேத்து மாமா மச்சான் என பேசிக்கலாம்னு சொன்னீங்க.. இப்போ நீங்களே மரியாதைனு சொல்கிறீங்ளே?” என்று நினைவுபடுத்த, அதன்பின்னர் அண்ணாச்சி, “சரி.. மரியாதையா பேசுடா மச்சான்” என்று அபிஷேக்கை பார்த்து கூறுகிறார். அதன் பிறகு அபிஷேக், “மாமா..” என்று தொடங்கி ஜாலியாக பேசுகிறார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொருவர் பற்றியும் அபிஷேக் பல நேரங்களில் ரிவ்யூ கொடுப்பது வழக்கம். அண்மையில்தான் அபிஷேக் தன்னுடைய கதையை கூறி இருந்தார். அந்தக் கதையில் தன்னுடைய தந்தையின் உதவி செய்யும் மனப்பான்மை, அதனால் அவர் வீட்டை அடகு வைத்து டிரைவருக்கு உதவி செய்ததால் உண்டான கடன், அதனால் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்தது, தன் திருமணம், பின்னர் தந்தையின் மரணம் உள்ளிட்டவற்றை பகிர்ந்துகொண்டார்.
மேலும் கடைசியில் அந்த வீட்டை தன் சொந்த உழைப்பில் மீட்டதாக குறிப்பிட்ட அபிஷேக், “நான் அடிக்க அடிக்க மேல வந்து கொண்டே இருப்பேன்!” என்று ஆவேசமாக பேசி இருந்தார். அதன் பிறகு அபிஷேக் குறித்து ராஜூவிடம் பேசிய இமான் அண்ணாச்சி, அபிஷேக் உழைப்பால் தன் வீட்டை மீட்டது குறித்து பெருமையாக பேசிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.