நடிகை இலியானா தனது உடற்பயிற்சி போட்டோவை வெளியிட்டுள்ளார்.
Also Read | இளையராஜாவின் VINTAGE பாட்டுக்கு க்யூட் ஸ்டெப் போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. சூப்பர் வீடியோ
தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா. பின் தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையானார். பின் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா. அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார்.
இலியானா, அவ்வப்போது ரசிகர்கள் உடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், ஆலோசனைகள் கூறுவதும் இதில் குறிப்பிடத்தக்கது.
உடல் அரசியல் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இலியானா, கடந்த பிப்ரவரி மாதம் ஒருவரை 'ஒல்லியாக' மற்றும் 'அதிக நிறமாக' காட்டக்கூடிய அனைத்து புகைப்பட எடிட்டிங் ஆப் பயன்பாடுகளையும் நீக்கியதாக கூறி, தனது உடற்பருமனான போட்டோவையும் பகிர்ந்து இருந்தார், , நடிகை இலியானா டி'க்ரூஸ். இது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் நடிகை இலியானா உடற்பயிற்சி செய்யும் போட்டோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். உடல் தகுதி குறித்து இலியானா அவ்வப்போது போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
Also Read | அஜித் நடிக்கும் AK61.. இணையத்தை கலக்கும் BTS போட்டோ! யாரெல்லாம் இருக்கானு பாருங்க