இசையமைப்பாளர் இளையராஜாவின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ள திடீர் சோகம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் லெஜன்டரி இசையமைப்பாளர் இளையராஜா. காலங்களை கடந்து இவரது பாடல்கள் இசை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது. இளையராஜா தனது ஆரம்பக்காலத்தில் தனது சகோதரர்களான பாவலர் சந்திரசேகர், கங்கை அமரன் ஆகியோருடன் இணைந்து பாவலர் பிரதர்ஸ் என்ற இசைக்குழுவை நடத்தி வந்தார்.
இந்நிலையில் தற்போது இளையராஜாவின் அண்ணனான, பாவலர் சந்திரசேகரின் மகன் காலமானார் என தெரிய வந்துள்ளது. இவர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாருடன் இணை இயக்குநராக பல படங்களில் பணியாற்றியுள்ளார். பாவலர் மைந்தன் என்றும் ஜோ என்றும் அழைக்கப்படும் இவர் காலமாகியிருக்கும் தகவல் இளையராஜாவின் குடும்பத்தினரையும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இசை ஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலரின் மகனும் என் நெடுநாள் நண்பருமான பாவலர் மைந்தன் என்கிற ஜோவின் மரணச் செய்தி உள்ளம் துடிக்க வைக்கிறது.
இயக்குனர் ஆர் வி உதயாகுமாரின் உதவி இயக்குனர்கள் என்ற வகையில் ஜோ எனக்கு மூத்தவர்.
என் மேல் மரியாதையும் அன்பும் சரி பாதியாகக் கொண்டவர். (1/2) pic.twitter.com/KgZXnvPc2E
— Diamond Babu (@idiamondbabu) July 16, 2020