இளையராஜாவின் இசைக்குழுவில் ட்ரம்மராக இருந்த புருஷோத்தமன் நேற்று காலமாகியுள்ளார்.
இளையராஜா இசையமைத்த அன்னக்கிளி திரைப்படம் முதல் அவருடன் பயணித்து வந்தவர் புருஷோத்தமன். இவர் ட்ரம்மராகவும், மியூசிக் கண்டக்டராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் மடைத் திறந்து பாடலிலும் இவர் ட்ரம்ஸ் வாசித்து அசித்தியிருப்பார்.
இதனிடையே புருஷோத்தமன் காலமாகியிருப்பது இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது 65 வயதில், அவர் நேற்று மறைந்திருக்கிறார். இதையடுத்து இசைக்கலைஞர்கள் முதல் ரசிகர்கள் வரை, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் பாடல்களில், தனது ட்ரம்ஸால் அசத்திய புருஷோத்தமனின் மறைவு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.