அக்கா குருவி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.
Also Read | தெலுங்குல RRR, கன்னடத்துல KGF பிரம்மாண்டம்னா.. தமிழ்ல அது "வாடிவாசல்" - கலைப்புலி தாணு Exclusive
Children of Heaven…
1997 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் childran of heaven படம் இடம் பிடித்தது. ஆனால் அந்த ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற படத்தை விட உலகளவில் கொண்டாடப்படும் படமாக சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படம் உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மஜித் மஜீது தற்போது உலகளவில் கொண்டாடப்படும் இயக்குனராக உள்ளார். அவர் இயக்கத்தில் சமீபத்தில் இந்தியாவை மையமாகக் கொண்டு ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது.
தமிழில் அக்கா குருவி…
இப்படி உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக தமிழில் அக்கா குருவி திரைப்படம் உருவாகியுள்ளது மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. PVR பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
இளையராஜாவின் பாராட்டு…
இந்த படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. அதில் இளையராஜா பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரது பேச்சில் “சாதாரணமான நாட்களில் நான் உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம், ஒரு சிறு ஷூவை வைத்து கொண்டு, சிறு குழந்தைகளின் உலகத்தை ஒரு சின்ன பிரச்சனையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை மிக தத்ரூபமாக, இப்படி ஒரு அற்புதமான சினிமாவாக தந்துள்ளார்களே என ஆச்சர்யமாக இருந்தது. நம் தமிழ்நாட்டில் ஏன் இப்படி படங்கள் எடுப்பதில்லை, ஏன் வருவதில்லை என வருத்தமாக இருந்தது. நம்ம இயக்குநர் சாமி அதே படத்தை, நம்ம ஊருக்கு தகுந்தவாறு மாற்றி, ஒரிஜினல் படத்தை விட சுவாரஸ்யமாக அருமையாக எடுத்திருக்கிறார். இது மாதிரி படங்கள் ஜெயிக்க வேண்டும். மக்களின் ரசனை வளர வேண்டும் இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி.” எனக் கூறியிருந்தார்.
கவனம் ஈர்த்த டிரைலர்…
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. குழந்தைகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் மெய் சிலிர்க்கும் விதமாகவும், அதற்கு ராஜாவின் இசை மனதை வருடும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களையும் செய்துள்ளதாக தெரிகிறது. டிரைலரின் இறுதியில் இளம் நடிகர் கதிர் சர்ப்ரைஸாக தோன்றுவது மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டிரைலர் படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8