சென்னை, 16, பிப்ரவரி 2022: 'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எம்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'.
கடைசி விவசாயி..
விவசாயிகளின் அழிவு என்பது விவசாயத்தின் ஆழிவு. விவசாயத்தை அழித்து வியாபாரிகள் கொழிக்க நினைப்பது இந்த பூமியில் மனித வாழ்வாதாரத்தின் அழிவு என்பதை பல களங்கள் பேசியிருந்தாலும், அதை எதார்த்தமாகவும் அழுத்தமாகவும், நம்பகத்துடன் பதியவைக்கும் படமாக கடைசி விவசாயி திரைப்படம் பல பாராட்டுகளை குவித்து வருகிறது.
இளையராஜா-லாம் இந்த படத்துக்கு HELP பண்ண முடியாது!
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் இந்த படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் பாராட்டி புகழ்ந்து பேசும்போது, “இந்த படத்தில் மியூசிக்கை கையாண்ட விதம் இருக்கே.. நான் இங்கிருந்து போகும்போது பயந்துகொண்டே போனேன். இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்கவில்லையே.? என்ன இது? இளையராஜா இந்த படத்துக்கு இளையராஜா இல்ல? என்றெல்லாம் கூட நினைத்தேன்.
ஆனால் இளையராஜால்லாம் இந்த படத்துக்கு ஹெல்பே பண்ண முடியாது. எந்த மியூசிக் டைரக்டர் மியூசிக் போடாலும் இந்த படத்துக்கு ஹெல்ப் பண்ண முடியாது. ஏனென்றால் இந்த படம் எல்லா டெக்னிக்கலையும் தாண்டி, எல்லா இசையையும் தாண்டி, எல்லாத்தையும் தாண்டி, அப்படி ஒரு உயர்வுக்கு போய்விட்டது!” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
மிஷ்கினும் ராஜாவும்..
இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ ஆகிய திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இளையராஜா மீது மிகுந்த மரியாதையும், அவரது இசை மீது பிடிப்பும் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். எனினும் இயக்குநர் மிஷ்கின் இப்படி ஒரு கருத்தை கடைசி வவசாயி படம் குறித்து முன்வைத்ததுடன், அவ்வாறு, தான் சொல்வதற்கான உருக்கமான காரணத்தையும் அவரே விளக்கியுள்ளார்.
பிசாசு - 2 ஆக்கப் பணிகளில்..
நந்தலாலா, சூப்பர் டீலக்ஸ், சவரக்கத்தி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின், தற்போது ஆண்ட்ரியாவின் நடிப்பிலான பிசாசு 2-ஆம் பாகம் திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.