BiggBossUltimateTamil, 04, பிப்ரவரி 2022:- டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
காபி பொடி பிரச்சனை
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வனிதா காபி பொடி டப்பாவை எடுத்து வைத்துக்கொள்ள , அதை சென்று மறித்து கேட்ட அபிராமியிடம் வனிதா இது கேவலமாக இருக்கு என சொல்ல இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டனர். இந்த சண்டைக்கு பின் காபி டப்பாவை வனிதா தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டார்.
தேம்பித் தேம்பி அழுத வனிதா
அதன் பிறகு வெளியான இன்னொரு ஆடியோவில் வனிதா ஏன் பிக்பாஸ் இப்படி பண்றீங்க? உங்களுக்கு பிரச்சனையே இல்லனு இப்படி இதயெல்லாம் வெச்சு பிரச்சனையாக்குறீங்களா பிக்பாஸ்? இதான் உங்களுக்கு பிரச்சனையா? என புலம்பியிருந்தார். இந்த ஆடியோவை, ‘எத்தனை பிரச்சனை?’ என குறிப்பிட்டு டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் பதிவிட்டுள்ளார்கள்.
நான் வெரல காட்டிற போறேன்..
இந்நிலையில் வனிதா இன்னும் டென்ஷனாக இன்னொரு ப்ரோமோவில் தனக்கு காபியே வேண்டாம் என சொல்லி, கோபமாக செல்கிறார். அப்போது உடனே வனிதாவின் பின்னாலேயே போன சுரேஷ் சக்ரவர்த்தி, வனிதாவிடம், “கொஞ்சம் நில்லு. எனக்கு காபி வேணாம். என்னோடத எடுத்துக்க.. நான் தரேன்” ந சொல்லி சதானப் படுத்த முயற்சித்தார். அப்போது, வனிதா ஆவேசமாக, “நான் வெரல காட்டிற போறேன்”... என்று சொல்லிவிட்டார்.
நீ காட்றீ ...
உடனே வனிதாவே மீண்டும் சுரேஷ் சக்ரவர்த்தியிடம், “உங்கள இல்லை” என சேர்த்து சொல்லிவிட்டார். ஆனால் அதற்கு சற்றும் தாமதிக்காமல், சுரேஷ் தாத்தா, “நீ காட்றீ .. இல்ல.. நான்.. நான்.. சொல்றத கேளு.. நான் தரேன்” என வனிதாவின் கோபத்தை தணிக்கும் விதமாக பேசிக்கொண்டு பின்னாலேயே ஓடினார்.
எனக்கு ஒரு M**ம் தேவயில்ல
இவ்வாறு வனிதாவை சமாதானப் படுத்த முயற்சித்தபோது , அவரிடம் ஆவேசமாக பேசிய வனிதா, “எனக்கு ஒரு M**ம் தேவயில்ல” என்று காட்டமாகக் கூறிவிட்டார். பின்னர் திரும்பி நடந்து போன வனிதா, “உங்கள சொல்லல அண்ணா” என சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மீண்டும் கூறினார்.
அப்படியே விடுங்க
அதன் பின்னர் வனிதாவை குறிப்பிட்டு சுரேஷ் தாத்தா மிகவும் அப்செட் ஆகி, என்னப்பா இது.. யாராவது போய் பேசுங்க வனிதா கிட்ட.. என்று சொல்ல, மற்றவர்களோ, “விடுங்க... கொஞ்ச நேரம் அப்படியே விடுங்க” என கூறி, சுரேஷ் தாத்தாவை சதாமானப் படுத்தினர்.