பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிஷேக், பிஹைண்ட்வுட்ஸ் தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார்.
இதில் பல்வேறு விஷயங்களை அபிஷேக் பகிர்ந்திருக்கிறார். அதில் Fatman ரவீந்தர் (தயாரிப்பாளர், லிப்ரா) கேட்ட கேள்விகளுக்கு அபிஷேக் பதிலளித்துள்ளார். அப்பொது அபிஷேக் கூறியதாவது, “பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் நான் புரிந்து கொண்டது, இந்த உலகத்தை பார்க்கும் கண்ணோட்டம் ஒன்றே ஒன்றுதான்.
அதாவது இன்னொரு நிகழ்ச்சியில் உடல் வலிமையை வெளிக்கொணரும் ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்று நடக்கிறது. பிக்பாஸில் மூளையை பயன்படுத்தி விளையாடுவதற்கான போட்டி நடக்கிறது என்பதுதான். என்னளவில் இந்த புரிதல் தான் வந்தது என்று குறிப்பிட்டு பேசத் தொடங்கிய அபிஷேக், சிறு வயதில் இருந்தே தனக்கு தெய்வீக உணர்தலை நோக்கி நகர்வது என்பது சுவாரஸ்யமான ஒன்று என தெரிவித்தார்.
குறிப்பாக ரவீந்தர், “பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது இறுதியில் கமல்ஹாசன் அவர்கள் உங்களிடம் ஓவர் கான்ஃபிடண்ட் பற்றி கூறியிருந்தார். அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன? நீங்கள் அப்படித்தான் இருந்தீர்களா? அப்படி உங்களுக்கு தோன்றுகிறதா?” என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த அபிஷேக், “கான்ஃபிடன்ட் மற்றும் ஓவர் கான்ஃபிடண்ட் இரண்டுக்குமான அந்த மெல்லிய கோட்டினை துல்லியமாக பிடிக்க முடியாது. அதுதான் சிரமம். நான் பிக்பாஸ் வீட்டுக்குள் டாஸ்குகளின்போது நான் நடந்து கொண்டது அக்ரெஸிவாகவும், நான் அனைவரையும் இன்ஃப்ளூயன்ஸ் பண்ணுவதாகவும் இருக்கிறது என்று சொன்னால், அதுதான் என்னுடைய இயல்பு.
என்னைப் பொருத்தவரை அது ஓவர் கான்ஃபிடண்ட் அல்ல. இது போட்டி மனப்பான்மைக்கான பிஹேவியர் என்று நான் நினைக்கிறேன். வெளியில் பார்ப்பவர்களுக்கு இது ஓவர் கான்ஃபிடன்ட்டாக தெரிந்தால் அது பற்றி எனக்கு தெரியவில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆயுத எழுத்து படத்தில் சூர்யா சார் சொல்வார், ‘இது திமிரு இல்ல.. யோக்கியம்’ என்று” என அபிஷேக் பேசியுள்ளார்.
இதேபோல் தன்னைப் பற்றி பலரும் யூட்யூபில் தாறுமாறான கண்டெண்ட் போடுபவர்களுக்கும் மேலோட்டமான பதிலடி கொடுத்து அபிஷேக் பேசி, பகிர்ந்த முழுமையான பேட்டியை இணைப்பில் காணலாம்.