Sarathkuamar: 80, 90-களில் இருந்தே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் சரத்குமார். இடையில் சூரியவம்சம், நாட்டாமை உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கிய நடிகர் சரத்குமார், நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பில் இருந்திருக்கிறார். இன்றும் சளைக்காமல் புதிய புதிய திரைப்படங்களிலும் வெப்சீரிஸிலும் சரத்குமார் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சரத்குமார் வருகை
தற்போது, பிக்பாஸ் வீட்டுக்குள் சரத்குமார் வருகை தந்ததும் அனைவரும் குஷி ஆகிவிட்டனர். வந்தவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற ஆர்வமும் அவர்களிடத்தில் இருந்தது. முன்னதாக பிக்பாஸ் வீட்டிற்கு வருகைதந்த சரத்குமார் அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு அதன் பின்னர் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொண்டார்.
பரம்பரா வலைத் தொடர்
நடிகர் சரத்குமார் தற்போது பரம்பரா எனும் வலைத் தொடரில் நடித்துள்ளார். இந்த வலைத்தொடர் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது. இதில் ஜெகபதி பாபு, சரத்குமார், நவீனா சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர். 7 எபிசோடுகள் கொண்ட இந்த வலைத் தொடரின் டிரெய்லர் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
யாராவது ஒருவர்தான் வெற்றி பெறப் போகிறீர்கள்
அதன் பிறகு மீண்டும் கையில் ஒரு பெட்டியுடன் வந்த சரத்குமார், அந்த பெட்டியை திறந்து வைத்தார். “அதில் 3 லட்சம் ரூபாய் இருக்கலாம், அதற்கு மேலும் இருக்கலாம் என்று கூறியதுடன், இந்த பணத்துடன் இந்த போட்டியில் இருந்து விடை பெறுபவர்கள் விடை பெறலாம், யாராவது ஒருவர்தான் வெற்றி பெறப் போகிறீர்கள். இன்றைய இந்த பெனிஃபிட்டா? நாளைய சாதனையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு செல்வது தான் சரியான முடிவு என்று நான் சொல்ல மாட்டேன். அது உங்கள் முடிவு!” என்று கண்ணாடி கூண்டுக்குள் நின்றபடி கூறினார்.
பிசிக்கல் ஃபிட்னஸ்
அதன் பின்னர், சிபி மற்றும் அமீர் இருவரையும் புஷ்-அப்ஸ் எடுக்கச் சொன்ன நடிகர் சரத்குமார், ஒவ்வொருவருக்கும் 25 கவுண்ட்ஸ் புஷ்-அப்ஸ் எடுக்கச் சொல்லி டாஸ்க் கொடுத்தார். அதை ஏற்ற அமீரும், சிபியும் உடனே செய்தனர். அதன் பிறகு பிசிக்கல் ஃபிட்னஸ் பற்றி சரத்குமார் பேசினார்.
பரவால்ல எல்லாரும் ஃபிட்டாதான் இருக்கீங்க!
இதனைத் தொடர்ந்து தாமரைக்கும் பிரியங்காவுக்குமான பலப்பரீட்ச்சை ஒன்றை வைத்தார். தன் ஒரு கையால், மேஜை மீது இருக்கும் எதிராளியின் ஒருவரின் கையை வீழ்த்தக் கூடிய இந்த போட்டியில் தாமரை ஜெயித்தார். அதன் பின்னர் வியந்து பேசிய சரத்குமார், “பரவால்ல எல்லாரும் ஃபிட்டாதான் இருக்கீங்க!” என்று சிலாகித்தார்.
தெரு தெருவா பேப்பர் போட்டேன்
அதன் பிறகு பேசிய சரத்குமார், “பிசிக்கல் ஃபிட்னஸ் மட்டுமல்ல, மெண்டல் ஃபிட்னஸூம் வேண்டும். இரண்டுமே உள்ளதுதான் பிக்பாஸ் என்று நான் பார்க்கிறேன். நானும் தொடக்க காலத்தில் தெரு தெருவா பேப்பர் போட்டேன், நிறைய வேலைகள் செய்தேன். மன உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது!”.. என்று கூறினார். சரத்குமார் பேசியதை கேட்டு ஹவுஸ்மேட்ஸ் உருகிப் போயினர். அதேசமயம் மோட்டிவேஷனகாவும் உணர்ந்தனர்.
Also Read: ‘தாமரை உங்களுக்கு தனி வணக்கம்!’..யாரு BiggBoss.. யாரு சரத்குமார்னே தெரில!