RRR Others USA
www.garudavega.com

"இந்த WEEK நான் இத செஞ்சே ஆகணும்.. கமல் SIR சொல்லிருக்காரு!".. ஃபினாலே டிக்கெட்... நிரூப் சொன்ன காரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil5: பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் 84 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் 21 நாட்கள் தான் இருக்கும் சூழலில், அனைவரையும் ஃபினாலே ரேஸ்க்கு பிக்பாஸ் நாமினேட் செய்துவிட்டார். இதனிடையே அனைவருக்கும் பிக்பாஸ் ஏற்பாடு செய்துள்ள ஒரு டெலிசியஸ் டின்னர் நாமினேஷன் டாஸ்க்கை பிக்பாஸ் வழங்கி இருந்தார்.

i should win this week kamal sir told me says niroop biggboss5

BiggBoss5 Tamil கிராண்ட் ஃபினாலே..

இந்த டாஸ்க்கின்படி போட்டியாளர்களுக்கு முன்பாக ஒரு கிராண்ட் ஃபினாலே டிக்கெட் வைக்கப்படிருக்கும். இந்த டிக்கெட்டை பெறுவதற்காக போட்டியாளர்கள் அனைவரும் முதற்கட்டமாக டின்னர் சாப்பிட்டுக் கொண்டே, காரண விளக்கங்களுடன் தங்களுக்கு ஏன் அந்த டிக்கெட் கிடைக்க வேண்டும். இன்னொரு நபருக்கு ஏன் அந்த டிக்கெட் கிடைக்க கூடாது என சொல்ல வேண்டும்.

இந்த week நான் ஜெயிச்சே ஆகணும்..

இந்நிலையில் இதுகுறித்து பேசிய நிரூப், “நான் இந்த week ஜெயிச்சாகணும். விளையாடியே ஆகணும். கடந்த வாரங்களில் பார்த்திருப்பீர்கள். மக்கள் என் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்ததாக கூறினார்கள். எனவே அதை நோக்கிய என் விளையாட்டை நான் முன்னெடுத்தாக வேண்டிய சூழலில் நான் இருக்கிறேன்.” என்று கூறினார்.

கட்டையை போட்ட தாமரை..

நிரூப் பேசி முடித்த பின்பு கடைசியாக இடைமறித்த தாமரை, “எங்கிட்டயும் அதே தான் சொன்னார்” என்று கூற, ஒரு கணம் அதிர்ந்து போய் பார்த்த நிரூப், “அதனால என்ன சொல்ல வர்ற?” என கேட்க, அதற்கு தாமரை, “இல்லை.. சொன்னேன். 

உன்னிடம் சொன்னது போல என்னிடமும் சொன்னார்கள், அதைத்தான் சொன்னேன் தவிர, நீ சொன்னதுக்கு கவுண்ட்டராக நான் சொல்லவில்லை” என்று கூறினார்.

கமல் சார் சொல்லியிருக்கார்..

எனினும் இந்த டாஸ்க்கில் நிரூப் பேசும்போது, “மீண்டும் என் பழைய விளையாட்டை அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. நான் ஆடியே ஆகவேண்டும்.

இல்லையென்றால் எதற்குமே அர்த்தம் இல்லாமல் போய்விடும். கமல் சார் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கார். அவர் சொன்னதை நான் காப்பாற்றியே ஆக வேண்டும்!” என்று ஒரு உத்வேகத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

Also Read: "உங்கள Judge பண்ணவே முடில!".. Dinner நாமினேஷனில் தாமரை மீது அமீர் அடுக்கிய விமர்சனம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

I should win this week kamal sir told me says niroop biggboss5

People looking for online information on Biggboss niroop, Niroop biggboss5, Niroop biggbosstamil5, Niroop Nandakumar, Niroop nandhakumar, Vijay tv, Vijay tv biggboss will find this news story useful.