சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் அதர்வா. தன்னை பற்றியும், தனக்கு ஏற்ற கதைகளை பற்றி Exclusive நேர்காணல் கொடுத்துள்ளார்.
பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமான இவர், பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் நடித்த ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. தமிழ் சினிமாவில் தனக்கென நிறைய பெண் ரசிகர்களையும் கொண்டுள்ளார்.
கடைசியாக இவர் நடித்த தள்ளிப்போகாதே படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தப்பே இல்லை
சமீபத்தில் அதர்வா தன்னை பற்றியும், தனக்கு ஏற்ற கதைகளை பற்றி பிகைண்ட்வுட்ஸிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, என்னை பொறுத்தவரையில், ஒரு பையனும் பொண்ணும் நண்பர்களாக இறுதி வரை இருக்க முடியும் என்பது தவறு இல்லை. நிறைய பேர் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். எந்த உறவும் யாரையும் பாதிக்க கூடாது அவ்ளோ தான் என்று கூறியுள்ளார்.
பரதேசி தான் காரணம்
நான் எப்பொழுதும் படத்தினுடைய வசூல் மற்றும் வரவேற்ப்பை பார்ப்பதில்லை அது ரசிகர்கள் கையில்தான் உள்ளது. இன்று நான் ஒரு நடிகனா ஒரு நம்பிக்கையோடு கேமரா முன்னாடி போய் நிக்கிறேன். அப்படின்னா, அதுக்கு பரதேசி படம் தான் முக்கிய காரணம். இன்றும் வேறு கதையில் நாம் இந்த ரோல் பண்ண முடியுமா என்று நினைக்கும் போது எனது ஆபீஸில் பரதேசி படத்தில் உள்ள ஒரு போட்டோ இருக்கிறது அதை பார்த்து நம்மால் முடியும் என்று நினைப்பேன்.
வலிமை படத்தின் ரிலீஸ் தேதி இது தானா? நடிகை ஹூமா குரேஷி வெளியிட்ட செம மாஸ் அப்டேட்!
பரதேசி படம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம். நான் ஒரு படமாக பார்க்காமல் ஒரு நடிகனின் நடிப்பில் பார்க்கும்போது அது முக்கியமாக அமைந்தது. நான் அதை எனது ஆரம்ப காலத்திலேயே செய்துவிட்டேன். எனக்கு ரொமாண்டிக் படங்கள் மிகவும் பிடிக்கும். ரொமான்ஸ் மட்டுமே இருக்கும் படங்கள் பண்ணனும் என்கிற ஆசையும் உண்டு. ஆனால் ரொமான்ஸ் அதிகமாக இல்லாமல் ஆக்சனும் இருந்தால் அதுவும் பிடிக்கும் என்று தனது கருத்தை பதிவு செய்தார்.
தள்ளிப்போகாதே
தள்ளிப்போகாதே படம் ஒரு ஹீரோ ஹீரோயின் காதலித்து கடைசியில் ஒன்று சேர்வது மாதிரியான படம் இல்லை. இது வாழ்க்கையில் வரக்கூடிய முதல் காதலை பற்றியானது. இது ஒரு காதல் படமாக மட்டுமல்லாமல் ஒரு நட்பு, பாசம் போன்ற உணர்வு. நாம் ஒருவரைக் காதலிக்கிறோம், பின் அவரை அடைய வேண்டுமென்று நினைக்கிறோம். ஆனால் இந்த படத்தில் அதையும் தாண்டி அவர்கள் சந்தோஷமாக இருந்தால் நாமும் சந்தோஷமாக இருப்போம் என்பதை உணர்த்தும் படம். காதல் என்பது ஒரு பெண்ணுக்கும் பையனுக்கும் மட்டுமில்லாமல் ஒரு நட்புக்கும் அது எப்படி இருக்கிறது என்பதுதான் இந்த படம்.
நல்லா யோசிப்பேன்
ஒரு இயக்குனர் என்னிடம் வந்து கதை சொல்கிறார் என்றால் நான் அதை இரண்டு மணி நேரம் தான் கேட்பேன். ஆனால் அந்த இயக்குனர் இரண்டு வருடம் மூன்று வருடம் இந்த கதையை ரெடி பண்ணியிருப்பார். ஒரு இயக்குனரின் எனர்ஜிதான் எண்ணில் பாயும். நான் ஒரு கதை கேட்டவுடன் அக்கதைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆலோசித்து, அதன் பின் நிறைய கேள்விகளும் கேட்பேன். அதற்குப் பின்பு தான் நான் இந்த படம் பண்ணலாமா வேண்டாமா என்பது இருக்கும்.
ரொமான்ஸ் பிடிக்கும்
நான் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போது எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் படம் பார்க்கச் செல்வேன். புது புது கதைகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும். நாம் ஒரு படம் நடிக்கும் போது அது என்னுடைய படம் அல்லது அது இயக்குனர் படம் என்று கூறாமல் மொத்த குழுவின் உடைய படம். அது வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அதன் பாதிப்பு ஒட்டுமொத்த குழுவையே சேரும். இப்போதைய சினிமாவின் இளம் மற்றும் ரொமான்டிக் நடிகர்களுக்கு திருமணம் ஆனால் அவர்கள் கரியர் பாதிப்பதில்லை. இப்போதுள்ள நிறைய நடிகர்கள் திருமணம் ஆகியும் வெற்றி அடைந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்போதைய தலைமுறை அதை பார்ப்பதில்லை நல்ல படங்களை பார்க்கிறார்கள் என்று நேர்காணல் மூலம் தனது கருத்துக்களை கூறினார்.