பா.இரஞ்சித் இயக்கத்தில், முரளி ஜி ஓளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையில், ஆர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படம் வெகுவிமர்சியாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கபிலன், மாரியம்மா, லெட்சுமி, வேம்புலி, டான்சிங் ரோஸ், ரங்கன் வாத்தியார், கெவின் டாடி உள்ளிட்ட பல கதாபாத்திரங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி எழுதி வருகிறார்கள்.
இதில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஜான் கொக்கென். தல அஜித்துடன் 'வீரம்' படத்தில் தமன்னாவை கொல்ல வரும் கூலிப்படை தலைவனாக நடித்திருப்பார். தற்போது வேம்புலி கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பை தல அஜித்துக்குச் சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார் நடிகர் ஜான் கொக்கென்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பதிவில் ஜான் கொக்கென் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:
"மிக்க நன்றி அஜித் சார். என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தியதற்கும், உத்வேகம் அளித்ததற்கும், எனது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியதற்கும். ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கவும் அதன் மூலம் நல்ல மனிதனாக மாற நீங்கள் தான் எனக்கு தூண்டுகோல். வேம்புலி கதாபாத்திரத்தை நான் உங்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன் சார். என்றும் அன்புடன்". என்று ஜான் கொக்கென் பதிவு செய்துள்ளார்.
Thank you Ajith Sir #thalaajith for always motivating me and encouraging me to believe in myself. You inspire me to work harder each day and to become a better human being. I dedicate this character "Vembuli" to you Sir. Love you Sir.
Please watch #SarpattaOnPrime @PrimeVideoIN pic.twitter.com/43HDDAZgmh
— Highonkokken (@johnkokken1) July 22, 2021