ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | Varisu : சக்ஸஸ் மீட்டில் விஜய்யின் 'வாரிசு' பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி உருக்கம்..!
இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா, நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.
இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.
அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.
இந்நிலையில், கார்டன் பகுதியில் அசீம் மற்றும் ஷெரினா ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அசீம்,"இந்த வீட்ல முதல் நாள்ல இருந்து எந்த கேங்-லயும் நான் இல்ல. நான் தனியா விளையாட கூடிய நபர். நான் இங்க வந்ததே, விளையாடி டைட்டில் ஜெயிக்கணும்னு தான். ஜெயிச்சிட்டு தான் போவேன். எனக்கு தமிழ் எவ்வளவு பிடிக்கும், தமிழ் மேல எனக்கு எவ்வளவு பற்று இருக்குன்னு காட்டவும், நிறைய பேர் இதெல்லாம் உன்னால முடியுமா-னு கேட்டாங்க, அவங்களுக்கு என்னால முடியும்னு சொல்றதுக்கும் இங்க வந்தேன். இந்த 12 வருஷத்துல மீடியா இண்டஸ்ட்ரில எனக்கான வளர்ச்சி கிடைக்கல. அதை நான் அடைய இந்த பிக்பாஸ் சப்போர்ட்டா இருக்கும். அதுனால பிக்பாஸ்க்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். என் வாழ்க்கையில அடுத்த லெவல் போறதுக்கு மட்டும் தான் இங்க வந்தேன். இந்த உலகத்துக்கு என்னை நிரூபிக்கணும்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அசீம்,"பிக்பாஸ்-ல முதல் நாள்ல இருந்து ஒரு விஷயத்துல தெளிவா இருந்தேன். அது, தனியா தான் இருக்கணும். எந்த கேங்-லயும் இருக்க கூடாது. அதே மாதிரி எனக்கு தப்புன்னு தோணிச்சுன்னா அது யாரா இருந்தாலும் கேள்வி கேட்ருக்கேன். நான் யாருக்கும் பணிஞ்சு பேசவோ பயந்து பேசவோ வேண்டாம். என்னுடைய இதயம் என்ன சொல்லுதோ அதைத்தான் பேசுவேன். அதுபோல, யாரை பத்தியும் பின்னாடி பேச மாட்டேன். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேரா சொல்லிடுவேன். அதுதான் என்னோட பழக்கம்" என்கிறார்.
Also Read | "இதெல்லாம் தூக்கி எறியனும் சார்".. Fire-ஆன விக்ரமனின் பேச்சு.. கடைசியில கமல் வச்ச ட்விஸ்ட்..!