தல, தளபதி ரசிகர்களுக்கு இடையில் ஒரு நல்லுறவை எப்போது விரும்புபவர்கள் தான் அஜித்தும், விஜயும்.
இந்த மாபெரும் நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ரசிகர்களால் எப்போதும் மாஸாக கொண்டாடப்படும். அந்த வகையில் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய எச்.வினோத், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கினார். பின்னர் அஜித் நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்கிவருகிறார். அதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இன்னொருபுறம் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பையும் வசூலையும் அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிக்கிறார். தளபதி 65 என்கிற இந்த படம் முடிந்த பின்னர் அவரை மீண்டும் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குநர் அட்லீ இயக்குவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிப்பில் தான் இயக்கும் விக்ரம் படத்துக்கான பணிகளில் மும்முரமாக உள்ளார்.
இந்நிலையில் தான் இயக்குநர் லோகேஷ் கனராஜூம், எச்.வினோத்தும் சந்தித்துள்ளனர். மிகவும் எதார்த்தமாக இருவரும் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் மகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “வினோத் அண்ணாவுடன் நீண்ட வருடங்கள் கழித்து நேரம் செலவிட்டேன். சகோதரத்துவம்!” என்று பதிவிட்டுள்ளார்.
Good time spent with #Vinoth anna after years! #Brotherhood🤗 pic.twitter.com/ovcKugV0Hu
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 17, 2021
இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் அளித்த ஒருவர், “உண்மையில தல ரசிகர்களின் நண்பன் தளபதி ரசிகனாக தான் இருப்பான்” என்று குறிப்பிட்டுள்ளார்.