உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். பல பிரபலங்களும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்தவகையில் பிரபலங்களில் முதல் நபராக கொரோனாவுக்கு பாதிக்கபட்டவர் டாம் ஹாங்ஸ் என்ற நடிகர் தான்.
ஹாலிவுட்டை சேர்ந்த இவர் ஆஸ்திரிலேயாவில் தன் மனைவியுடன் இருந்த போது நோயினால் பாதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருமே நல்ல முறையில் சுகம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர்.
சமீபத்தில் பேட்டி கொடுத்த அவர் தனது மனைவி சந்தித்த மிக கொடிய காலங்கள் அவை என்றும், அவருக்கு அதிக ஜுரம் இருந்ததாகவும். உணவு சுவை மறந்து மூன்று வாரங்களுக்கு மேலாக உணவில் நாட்டம் இல்லாமல் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவருக்கு வாந்தி பிரச்சனை இருந்ததாகவும், அதனால் தரையில் புரண்டு கிடந்ததாகவும் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் இருக்கும்போது ஒருமுறை மருத்துவர் என்னிடம் 'இப்பொழுது எப்படி இருக்கிறது? 'என்று கேட்டார். நான் என் வாழ்க்கையில் மிகவும் கொடிய ஒரு நேரத்தில் இருக்கிறேன் சில உடற்பயிற்சிகள் செய்யலாம் என்று பார்த்தாலும், பாதி கூட முடியவில்லை' என்று கூறினேன். அவர் "உங்களுக்கு கொரோனா இருப்பதை மறந்து விடாதீர்கள்" என்று கூறினார். இப்படி அந்த கொடூர நினைவுகளை கூறியுள்ளார்.