சென்னை, 20, பிப்ரவரி 2022, Ilaiyaraaja : இதுவரை 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா.
மியூசிக்கல் ஆல்பங்கள்
பல்லவி, சரணம் என திரைப்பட பாடல்களின் வழக்கமான வடிவத்துக்குள் பாடல்களை உருவாக்கினாலும், இசைஞானி இளையராஜா தம்முடைய இசையை மட்டுமே கொண்டு, அதாவது பாடல் வரிகள் இல்லாமல், இசைக்கருவிகளை மட்டுமே கொண்டு உருவாக்கிய மியூசிக்கல் ஆல்பங்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்கள் இருப்பதை போலவே, இளையராஜாவின் இந்த வகையான மியூசிக்கல் ஆல்பங்களுக்கு உலகம் முழுவதும் மொழி, நாடு கடந்த ரசிகர்கள் உள்ளனர்.
"How to Name it"
அவற்றுள் ஒரு புகழ்பெற்ற ஆல்பம்தான், கடந்த 1986-ம் ஆண்டு வெளியாகி, இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற "How to Name it" ஆல்பம். பல்வேறு தனியார் நிகழ்ச்சி, பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் Mime-களில் (பேசா நாடகம்) பின்னணி இசையாக இந்த ஆல்பத்தை பலரும் பயன்படுத்தியிருப்பதை காண முடியும்.
பத்து Sound tracks
வயலின், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகளை முதன்மையாகக் கொண்டு இந்த ஆல்பம் உருவாகியிருக்கும். இந்த ஆல்பத்தில் How to Name it, Mad Mod Mood Fugue, You cannot Be Free, Study for Violin, Do Anything உள்ளிட்ட, பத்து instrumental tracks இடம்பெற்றிருக்கும்.
‘வீடு’ திரைப்படத்தில் ..
இந்த இசை ஆல்பத்தின் 10-வது Sound track-ஆன Do Anything-ஐ, இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கிய ‘வீடு’ திரைப்படத்தில் இளையராஜா பயன்படுத்தியிருப்பார். வீடு திரைப்படத்தில் நாயகியில் இலக்கு வீட்டை கட்டி முடிப்பதாக இருக்கும்.
ஆனால் வீடானது பூச்சு வேலை முடிக்கப் படாமல், கட்டி முடிக்கப்பட்டிருக்கும், அப்போது அந்த வீட்டுக்குள் போகும் முன் படிக்கட்டில், சொக்கலிங்க பாகவதர் காலடி எடுத்து வைக்கும்போதும் இந்த How to Name it ஆல்பத்தின் 10-வது Sound track-ஆன Do Anything பின்னணி ஒலிக்கத் தொடங்கி, அந்த காட்சியை இன்னும் கவித்துவமாக மாற்றும்.
"How to Name it" பார்ட் - 2
இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்களுள் ஒன்றான இந்த "How to Name it" மியூசிக் ஆல்பத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதாக இளையராஜாவே அறிவித்துள்ள செய்தி அவருடைய ரசிகர்களிடத்தில் பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
'சூப்பர்மேன்' பார்ட்- 2 வரும்போது, இசை ஆல்பத்தில் வரக்கூடாதா?
இதுகுறித்து தற்போது தமது சமூக வலைதளத்தில் உற்சாகத்துடன் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள இசைஞானி இளையராஜா, அதில், “திரைப்படங்கள்லலாம், பாகம் 1, பாகம் 2 , பாகம் 3 என வருவதை பார்க்கிறோம் இல்லையா?.. உதாரனமாக சூப்பர் மேன் 1, சூப்பர் மேன் 2, சூப்பர்மேன் 3-னு போகுது, பேட்மேன் 1, 2,3, 4-னு வரிசையாக வந்து போகுது.
Releasing soon…. “How to Name It 02” pic.twitter.com/OYqLyvFjRd
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 20, 2022
எனவே இப்போ இதேபோல மியூசிக்கில் ஏன் வரக்கூடாது அப்படினு ஒரு யோசனை எனக்கு வந்தது. அதனால், உங்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் How to Name it இரண்டாம் பாகம் சீக்கிரமே வரவிருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Also Read: அதிர்ச்சி! ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட பாடலாசிரியர் திடீர் மரணம்!