தமிழில் பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், சாமி, ராம், பருத்திவீரன், கழுகு, ஆடுகளம், சூரரைப் போற்று உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் சினேகன்.
இவர் தான் காதலித்து வந்த பிரபல சீரியல் நடிகையான கன்னிகா ரவியை கடந்த ஜூலை 29-ஆம் தேதி தான், கமல்ஹாசன் முன்னிலையில் திருமண பந்தமாக கரம் பிடித்தார். இவர்களது திருமணத்துக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை, நேரில் சென்றும் வலைதளங்களின் வாயிலாகவும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தம் திருமண ஸ்டில்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சினேகன், “எத்தனை விமர்சனங்கள்... எத்தனை கிசுக்கிசுக்கள்... எத்தனை ஏளனங்கள்... எத்தனை அவமதிப்புகள்... அத்தனைகளையும் ரணங்களோடு தாங்கிக் கொண்டது. இப்படி ஒரு தருணத்திற்காகத்தான்.” என பதிவிட்டுள்ளார். முன்னதாக, “ காதலியே.. மனைவியாய்.. மனைவியே..காதலியாய்.. அமைவது பெரும் வரம். அந்த வரம் எனக்கு கிடைத்திருக்கிறது.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
எத்தனை விமர்சனங்கள்...
எத்தனை கிசுக்கிசுக்கள்...
எத்தனை ஏளனங்கள்...
எத்தனை அவமதிப்புகள்...
அத்தனைகளையும் ரணங்களோடு தாங்கிக் கொண்டது.
இப்படி ஒரு தருணத்திற்காகத்தான். pic.twitter.com/QArgnaaPgi
— Snekan S (@KavingarSnekan) August 2, 2021
இதனிடையே கவிஞர் சினேகன், இயக்குநர் ஹரியின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் கவுதம் கார்த்தி, சேரன் மற்றும் பலர் நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்திலும் சினேகன் நடித்து வருகிறார். இந்த படவேளைகளில் தாம் எடுத்துக்கொண்ட ஷூட்டிங் ஸ்டில்களை தம்முடைய பக்கங்களில் சினேகன் பகிர்ந்துள்ளார்.
திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் "ஆனந்தம் விளையாடும் வீடு" என்ற படத்தில் நடித்ததும்.
அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
திருமணம் திருப்பம் தரும்
என்பது உண்மைதானோ...🥰 pic.twitter.com/dX6UsiUoxm
— Snekan S (@KavingarSnekan) August 2, 2021
இதுபற்றி தம் ட்விட்டர் பக்கத்தில், “திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் "ஆனந்தம் விளையாடும் வீடு" என்ற படத்தில் நடித்ததும்.
அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ...” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.