www.garudavega.com

"வேலையாவே இருந்துட்டேன்.. நண்பர்களே இல்லை.. எங்க போய் நட்பை தேடுவேன்.!” - செல்வராகவன் உருக்கம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கி முக்கிய இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன்.

How can i find friends Selvaraghavan emotional tweet

Images are subject to © copyright to their respective owners.

Also Read | காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய 'LEO' பட பிரபலம்.. வைரலாகும் பதிவு!

பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், கடைசியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கினார். இந்த படம் முன்னதாக பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் செல்வராகவன் நடித்திருந்தார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். அண்மையில் மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான பகாசூரன் படத்தில் செல்வராகவன் நடித்தார். 

சில தினங்களுக்கு முன்னதாக செல்வராகவன் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில்,"“தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.” என அவர் அதில் எழுதியிருந்தார்.

How can i find friends Selvaraghavan emotional tweet

Images are subject to © copyright to their respective owners.

அதன் பிறகு இன்னொரு பதிவில்,"எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்து விட்டு “கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல“ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்" என எழுதி கீழே அனுபவம் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புதிய ட்வீட்டில்,  “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் 😥😥😥” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Also Read | PS2 : "காதலே வில்லனா இருக்கும்".. பொன்னியின் செல்வன் - 2 மேக்கிங் GLIMPSE.. வீடியோ!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

How can i find friends Selvaraghavan emotional tweet

People looking for online information on Selvaraghavan will find this news story useful.