KAAPAN USA OTHERS

“அழகான பொண்ணு கோவப்படலாமா...?” - ஒரே வார்த்தைல இப்படி கவுத்துடீங்களே தர்ஷன் இது நியாயமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் முழுவதும் டிக்கெட் ரூ ஃபினாலே டாஸ்கில் போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.

Hotstar Tharshan Sherin flirting Bigg Boss Tamil 3 Promo 3

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைஅய் எபிசோடிற்கான புரொமோ வீடியோக்களில், இதுவரை நடக்காத சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. விளையாட்டின் முனைப்பில் லாஸ்லியா மீது சாண்டி இடிக்க, இதனால் கொந்தளித்த கவின், சாண்டியிடம் கோபித்துக் கொண்டார். கவினின் கோவத்தை பொறுக்காமல் ஓவரா பண்ணாதடா விளையாட்டுனா அப்படி தான் நடக்கும் என மீண்டும் சீறினார்.

இதையடுத்து வெளியான அடுத்த புரொமோவில், அடிப்பட்ட லாஸ்லியாவை கவின் நலம் விசாரிக்க, மற்ற போட்டியாளர்கள் விளையாடாமல் கவினுக்காக காத்திருந்தனர். ஒருவருக்காக மற்றவர்கள் ஏன் விளையாடாமல் காத்திருக்க வேண்டும் என ஷெரின் கொதித்து எழ, கூடையில் இருந்த பந்துக்களை காலால் எட்டி உதைத்து தட்டிவிட்டார். இந்த விவகாரத்தில் எல்லாரும் அவ்ளோ நியாயமாக தான் விளையாடுகிறீர்களா என கோபப்பட்டார்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள 3வது புரொமோ வீடியோவில், இதுலா ஒரு விளையாட்டு என கோவத்தில் உள்ளே சென்ற ஷெரினை சமாதானம் செய்ய தர்ஷன் உள்ளே செல்கிறார். அவரிடம், இந்த டிராமவை எல்லாம் பாக்க முடியாது. இங்க கேம் விளையாட வந்தாங்களா இல்ல எதுக்காக வந்தாங்க தெரியல என ஷெரின் தனது கோவத்தை வெளிப்படுத்த, அழகான பொண்ணு இப்படி கோவப்படலாமா என ஒரே வார்த்தையில் கேட்டு ஷெரினை தர்ஷன் வாயடைக்கச் செய்தார்.

இந்த ரணகளத்துலையும் ஒரு கிளுகிளுப்பு என்பது போல, கோபத்தில் இருந்த ஷெரினை கூல் செய்துவிட்டார் தர்ஷன். எனினும், கவின், ஷெரின், சாண்டி இடையிலான கருத்து வேறுபாடுகள் நீங்குமா தீவிரமாகுமா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.

“அழகான பொண்ணு கோவப்படலாமா...?” - ஒரே வார்த்தைல இப்படி கவுத்துடீங்களே தர்ஷன் இது நியாயமா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Hotstar Tharshan Sherin flirting Bigg Boss Tamil 3 Promo 3

People looking for online information on Bigg Boss Tamil 3, Kavin, Losliya, Sherin, Tharshan will find this news story useful.