கன்னட திரைப்பட நடிகையாக, திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த, ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மூலமாக தென் இந்தியாவில் பல ரசிகர்களை கொள்ளை கொண்ட ராஷ்மிகா மந்தனா, நடிகர் கார்த்தியுடன் இணைந்து ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவிடம் ரசிகர்கள் சிலர் கேள்விகளைக் கேட்டுள்ளனர். இதற்கு ராஷ்மிகா அளித்த சுவாரசியமான பதில்கள் வைரலாகி வருகின்றன. அதில், “நான் புகைப் பிடிப்பதை விரும்புவதில்லை. புகைப் பிடிப்பவர்கள் சூழ்ந்த இடத்தில் என்னால் நிற்க கூட முடியாது. நடிகர் அல்லு அர்ஜுனுடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் மிகவும் அருமையானவர். தேர்ந்த நடிகர். தொழில் நேர்த்தி உடையவர். பிரில்லியன்ட் டான்சர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “தளபதி விஜயுடன் சேர்ந்து எப்போது படம் பண்ணுவீர்கள்?” என்று ரசிகர்கள் கேட்டதற்கு, “மிக சீக்கிரமாக விஜய்யுடன் படம் பண்ணுவேன் என்று நம்புகிறேன்!” என குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “விஜய் தேவரகொண்டா உங்களுக்கு எப்படியானவர்?” என்று கேட்டதற்கு, ராஷ்மிகா க்யூட்டான ரியாக்ஷன் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ALSO READ: விஜய் சேதுபதியின்.. 'மரண மாஸ்' குத்தாட்டம்'.. வெறித்தனமான டான்ஸ் வீடியோ!
முன்னதாக தன்னை காண வந்த ரசிகர், தன்னை காண்பதற்காக 900 கிலோ மீட்டர் பயணம் செய்து, கர்நாடகா மாநிலத்திற்கு வந்தும், தன்னை காண முடியாமல் திரும்பி சென்றது பற்றி கேள்விப்பட்ட ராஷ்மிகா மந்தனா, இருந்த இடத்திலிருந்தே தனக்கு அன்பு செலுத்துமாறும், அடுத்தமுறை நிச்சயம் அவரை பார்த்து விடுவதாகவும் குறிப்பிட்டு, “இனி இப்படி செய்யாதீர்கள்!” என்று அந்த ரசிகரிடம் கேட்டுக்கொண்டுமுள்ளார்.