கொரோனா வைரஸினால் உலக அளவில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இதுவரை தீர்வு காணப்படாததால் பொது இடங்களுக்கு செல்ல மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பினால் திரைப்படங்களின் படப்பிடிப்பும், ரிலீஸ் தேதியும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 'டாவின்ஸி கோட்', 'ஃபாரஸ்ட் கம்ப்' உள்ளிட்ட படங்களில் மூலம் இந்திய ரசிகர்களுக்கு பிரபலமானவர் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ். இவர் நடிகை ரீடா வில்சனை கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் டாம் ஹாங்க்ஸ் கொரோனோ பாதிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். அதில், ''நானும் என் மனைவி ரீட்டாவும் ஆஸ்திரேலேயாவில் இருக்கிறோம். எங்களுக்கு உடம்பில் வலி, இயலாமை, கொஞ்சம் காய்ச்சலாக உணர்ந்தோம். இதனையடுத்து கொரோனோ சோதனை செய்து கொண்டோம். அப்போது எங்களுக்கு கொரோனோ இருப்பது உறுதியானது.
தற்போது மருத்துவர்கள் மருத்துவ நடைமுறைகளை கடைபிடித்து வருகின்றனர். இதன் அடுத்தடுத்த செயல்பாடுகள் குறித்து நான் உங்களுக்கு சொல்கிறேன். உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
— Tom Hanks (@tomhanks) March 12, 2020