www.garudavega.com

“நம்ம வெச்சு கொன்னியே.. எல்லாமே பொய் தானா”.. காதலர் தினத்தில் ஹிப் ஹாப் தமிழாவின் வைரல் பாடல்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் உருவாக்கத்தில்,  சுயாதீன ஆல்பம் பாடல் “பொய் பொய் பொய்” காதலர் தின சிறப்பு வெளியீடாக பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

Hip Hop Thamizha Adhi Poi Poi Poi album song is out

Images are subject to © copyright to their respective owners.

Also Read | இது 'சம்மு பரம்பரை' 😍.. மிரட்டல் லுக்கில் பாக்ஸிங் கத்துக்கும் நடிகை சமந்தா..!

தமிழில் ஹிப் ஹாப் ஸ்டைல் பாடல்களால் கவனம் பெற்ற ஹிப் ஹாப் தமிழா ஆதி, பின்னர் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் வளர்ந்தார். பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும், நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகர் பட்டாளம் உள்ளனர். இந்நிலையில்தான் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் புதிய ஆல்பம் பாடல் காதலர் தினத்தில் வெளியாகியுள்ளது

ஆம், ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் “பொய் பொய் பொய்”  எனும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றி செல்லும் பெண்ணின் துரோகம், வலி, ஏமாற்றம்  என  காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல்.  துடிப்பான இசை, அழகான விஷுவல்களில் மனதை கொள்ளைக் கொள்ளும் அற்புதமான காதலர் தின பரிசாக இப்பாடல் அமைந்துள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி, ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “பொய் பொய் பொய்” எனும் இந்த ஆல்பத்தில், “எனை காதல் செய்வேன் என்று நீ சொன்னது பொய் தானோ.. ஒரு பொய்யில் நானும் காதல் செய்தேனோ..”,“உன்னோடு துரோகம் எந்தன் தியாகம் எந்தன் சோகம் போதுமே”, “நம்பலனு சொன்னியே நம்ப வெச்சு கொன்னியே.. எல்லாமே பொய் தானா..”, “காதலுனு சொன்னியே கைப்பிடிச்சு நின்னியே எல்லாமே பொய் தானா” ஆகிய வரிகள் இடம் பெற்றுள்ளன.  இந்த பாடல் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதனிடையே இந்த பாடலை தொடர்ந்து மாதாமாதம், ஒரு சுயாதீன பாடலை வெளியிடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | நடிகை இவானாவோடு டான்ஸ் ஆடிய G.P. முத்து.. LOVE TODAY படத்தின் 100-வது நாள் விழாவில் ருசிகரம்!

மற்ற செய்திகள்

Hip Hop Thamizha Adhi Poi Poi Poi album song is out

People looking for online information on Hip Hop Thamizha, Poi Poi Poi will find this news story useful.