தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால்.
தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல,அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வா நடிப்பில் தமிழில் கோமாளி படம் வெளியானது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அவகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் திரைப்படங்கள் வெளிவரவில்லை.
இந்நிலையில் காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படமான ஹே சினாமிகா படத்தின் காஜல் அகர்வால் கதாபாத்திரத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மலர் விழி எனும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். ஹீரோவாக துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'ஹே சினாமிகா' படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். இது இவருக்கு அறிமுக படமாகும், துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கின்றனர்.
துல்கர் சல்மானின் 33வது படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் (21.12.2021) அன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் லுக் போஸ்டரை நஸ்ரியா - பகத் பாசில், சூர்யா - ஜோதிகா, ராணா டகுபடி ஆகியோர் வெளியிட்டனர். யாழன் எனும் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் RJ-வாக நடிக்கிறார். இந்த படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்க JIO ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சேட்டிலைட் உரிமையை கலர்ஸ் டிவி கைப்பற்றி உள்ளது. மேலும் ஒடிடி உரிமையான டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த படத்திற்கு ப்ரீத்தி ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். கார்க்கி கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ராதா ஸ்ரீதர் எடிட்டராக பணியாற்றுகிறார். இந்த படம் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 நாள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.