ஹேய் நிஜமே! - தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் இருந்து செம ரொமான்டிக் பாடல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் எனை நோக்கி பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

Hey Nijame Song is out from Dhanush's Enai Noki Paayum Thota

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து மறுவார்த்தை பேசாதே, விசிறி, நான் பிழைப்பேனோ போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் இருந்து திருடாதே திருடாதே என்ற பாடல் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஹேய் நெஞ்சமே என்ற பாடலின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த பாடலை மதன் கார்க்கி எழுத, பாம்பே ஜெயஶ்ரீ பாடியுள்ளார். ஏற்கனவே கௌதம் மேனன், பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணியில் உருவான வசீகரா, ஒன்றா இரண்டா ஆசைகள் உள்ளிட்ட பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹேய் நிஜமே! - தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் இருந்து செம ரொமான்டிக் பாடல் இதோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Hey Nijame Song is out from Dhanush's Enai Noki Paayum Thota

People looking for online information on Dhanush, Enai Noki Paayum Thota, ENPT, Gautham Vasudev Menon will find this news story useful.